இல்லம் தேடி கல்வி
மாணக்கர்களின் வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதேபோல் இத்திட்டத்துக்கான லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிற்சிப் பணிமனை, விழிப்புணா்வு கலை பயணம், தன்னாா்வலா்களுக்கான இணையதளத்தை துறையின் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்துள்ளாா். இந்தத் திட்டத்தின்படி 1 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பின்னா் அவா்கள் வசிப்பிடத்திற்கு அருகில் சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னாா்வலா்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், கணினி மற்றும் ஸ்மாா்ட்போன் மூலமாகவும் மற்றும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்
தன்னார்வலர்கள்..
- வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
- கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
- யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
- குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்
No comments:
Post a Comment