Wednesday, December 29, 2021

2022 ஆம் ஆண்டில் எத்தனை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும்

சென்னை: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி 2021 நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தில் விருச்சிக ராசியில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும். 2022ஆம் ஆண்டு 2 சூரிய கிரகணங்களும் 2 சந்திர கிரகணங்களும் நிகழப்போகிறது. மேஷ ராசியிலும், துலாம் ராசியிலும் நிகழப்போகிறது.


ஜோதிடர்களின் கூற்றுப்படி, 18 ஆண்டுகளில் மொத்தம் 41 சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன, ஆனால் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ஐந்து கிரகணங்கள் நிகழலாம். சராசரியாக, சூரிய கிரகணம் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் பூமியில் எங்காவது நிகழ்கிறது. ஆனால் அவை சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். 

டிசம்பர் 4ஆம் தேதி 2021 சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை நீடிக்கும். 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரை நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளாரஅறிவித்துள்ளனர். 

பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். நம்முடைய நாட்டின் நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. கிரகணம் நிகழும் நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

2022 இல் சூரிய கிரகணம்


2022ஆம் ஆண்டு ராகு மேஷ ராசிக்கும் கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, சனிக்கிழமையன்று மேஷ ராசியில் நிகழும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. நேரம் மதியம் 12:15 முதல் மாலை 04:07 வரை இருக்கும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், இதன் விளைவு தென்/மேற்கு அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் காணப்படும். 

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் துலாம் ராசியில் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிகழும். இதுவும் ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். இது அக்டோபர் 25, செவ்வாய்க்கிழமை 4மணி 29 நிமிடத்திற்கு மணிக்கு தொடங்கி 05 மணி 42 நிமிடம் வரை நீடிக்கிறது. ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிகாவில் காணப்படும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. 

2022 இல் சந்திர கிரகணம்


கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிஷப ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மேஷ ராசியில் மே 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கும் கிரகணம் காலையில் இந்த இரண்டு கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்களாக இருக்கும். இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்கலாம். இதன் தாக்கம் தெற்கு/மேற்கு ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தெற்கிலும் தெரியும் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் பார்க்கலாம்.


2022 ஆம் ஆண்டின் இரண்டாவது கடைசி சந்திர கிரகணம் துலாம் ராசியில் நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 1:32 முதல் இரவு 7.27 வரை நீடிக்கும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும். இதன் தாக்கம் இந்தியா உட்பட தெற்கு/கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 28, 2021

பிரதமர் மோடிக்கு ரூ.12 கோடியில் புதிய கார்

 பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டு உள்ளது. இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. உலகெங்கும் தயாரிக்கப்படும் கார்களில் இருப்பதிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட கார் இதுவாகும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கார்கள் வாங்கப்பட்டு உள்ளன.



மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும். வெடிகுண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டதாகும். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் தான் பிரதமர் மோடி பயணிக்கிறார். 

ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் சமீபத்தில் இந்தியா வந்த போது இந்த கார்கள் பிரதமரின் பயன்பாட்டிற்காக டெல்லியில் உள்ள ஹைதராபாத் விருந்தினர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற 2 கார்களை வாங்கி உள்ளனர். ஒரு காரின் விலை ரு.12 கோடி எனக் கூறப்படுகிறது. 


Monday, December 27, 2021

Tnpsc group 4 syllabus

Candidates who are going to appear for TNPSC Group 4 2022 Exams can download the TNPSC Group 4 Syllabus from this page.

Click here

Sunday, December 26, 2021

2021 முக்கிய சம்பவங்கள்

 

 2021-ல் இந்தியாவில் நடந்த சம்பவங்கள்!

புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது.

ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி கொண்டிருந்தாலும் மறுபக்கம் விவசாயிகளின் தீவிர போராட்டங்கள், தேர்தல் வன்முறை, ஒலிம்பிக்கில் நாடு தங்கம் வாங்கிய தருணம் என 2021-ஆம் ஆண்டு பல நிகழ்வுகளால் நிரம்பி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் 2021-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே திரும்பி பார்க்கலாம்.

2021 குடியரசு தினத்தில் வன்முறை:

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய தலைநகர் டெல்லியின் வீதிகளில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். போராட்டக்காரர்கள் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்து, போலீசாருடன் சண்டையிட்டு, வாகனங்களை கவிழ்த்து பெரிய களேபரத்தில் ஈடுபட்டனர். எல்லாவற்றுக்கும் உச்சமாக டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு ஒதுக்கப்பட்டசிறப்பு கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியை ஏற்றினர். 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அமைதியாக போராடி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டெல்லியின் பல இடங்களில் போலீஸாருடன் மோதினர். இது டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கலவரம் மற்றும் கடும் குழப்பத்திற்கு வழிவகுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தநிலையில் அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொலை, கற்பழிப்பு மற்றும் நாசவேலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சரியாக செயல்படாத மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது. எதிர்பாராத விதமாக தாக்கிய இந்த இரண்டாம் அலை காரணமாக நாட்டின் சுகாதார கட்டமைப்பு வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டது. நாட்டில் இருந்த மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையுடன் லட்சக்கணக்கான தொற்று பாதித்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

பாண்டோரா பேப்பர்ஸ் லீக் (Pandora Paper leaks):

இந்தியா உட்பட 91 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அதிகாரிகளின் நிதி ரகசியங்களை பாண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. லீக்கான பாண்டோரா பேப்பர்ஸில் 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பெயர்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் முக்கியமான நபர்கள். சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நீரவ் மோடி, ஜாக்கி ஷெராஃப், அஜித் கெர்கர் மற்றும் கிரண் மசூம்தார் ஷா உட்பட பலரின் பெயர்கள் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மார்கழி

 மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.


அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும்  பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

பூ வைப்பது ஏன்?

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. 
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம். 

Friday, December 24, 2021

பொங்கல் பரிசுத்தொகுப்பு

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இதேபோல் புதுவை அரசும் இவ்வாறு வழங்க திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதுவையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. அதையடுத்து இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பாப்ஸ்கோ நிறுவனத்திடம் இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 30-ந் தேதி மதியம் 1 மணியுடன் முடிவடைகிறது

புதுவையில் பொங்கல் பரிசுத்தொகுப்பானது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மஞ்சள்-100 கிராம், பச்சரிசி- 2 கிலோ, கடலை பருப்பு- 1/2 கிலோ, துவரம் பருப்பு- 1/2 கிலோ, உளுந்து- 1/2 கிலோ, பச்சைப்பயறு- 1/2 கிலோ, வெல்லம் -1 கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்-10 கிராம் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகுப்பானது 3 லட்சத்து 31 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு 7 பைகள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த 10 பொருட்களையும் தனித்தனியாக பார்சல் செய்து பின்பு அதனை ஒட்டுமொத்தமாக ஒரே பையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது அனைத்தும் பாப்ஸ்கோ நிறுவனம் மூலமாக புதுவை, காரைக்கால், மாகி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுவை அரசு பொங்கல் தினத்துக்குள் இந்த பரிசு பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆதலால் இந்த ஆண்டாவது பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

Thursday, December 23, 2021

உலகின் முதல் பத்து பணக்காரர்கள்

 1. ஜெஃப் போசோஸ்

குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 131 பில்லியன்.1994-ல் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவர் வீட்டு கார்ஷெட்டில் வைத்து துவங்கிய கம்பெனிதான், ஆமெசான்! இந்த 131 பில்லியனை சாவகாசமாக 7000-த்தால் பெருக்கி கொள்ளுங்கள்.அத்தனை லட்சம் கோடிகள் அவர் சொத்தின் மதிப்பு.மனித குல வரலாற்றிலேயே பெரிய செல்வந்தர் இவர்தான் என்கிறார்கள்.ஆமெசான் தவிர ‘ புளூ ஆர்ஜின்’ என்கிற ஏரோ ஸ்பேஸ் நிறுவனம்,வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் போன்றவையும் இவருடையவைதான். 

2.) பில் கேட்ஸ்

96.5 பில்லியன் டாலர்.நம்ம பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் நடத்தும் பில்- மெலிண்டா ஃபவுண்டேஷன்தான் உலகின் மாபெரும் கொடை நிறுவனம்.இவரும் இவரது நண்பர் பால் ஆலனும் சேர்ந்து 1975-ல் உருவாக்கிய மைக்ரோ சாஃப்ட்தான் பில்கேட்சை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 35.8 பில்லியன் டாலர்களை ஏழை நாட்டு மக்களின் சுகாதாரப் பணிகளுக்காக ஒதுக்கி இருக்கிறார்.குத்து மதிப்பாக இந்திய மதிப்பில் 25 லட்சத்து 20 ஆயிரம் கோடி

3 .  வாரன் பஃபெட்

82.5 பில்லியன் டாலர்கள்.நாம் பார்த்த முதல் இருவரும் பிறக்கும் முன்பே உலகின் டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்ற மனிதர் இவர். இவருடைய தந்தை ஒரு அரசியல்வாதி.தன்னுடைய 11-ம் வயதில் பங்குச்சந்தையில் நுழைந்த வாரன் பஃபெட் தனது 13-ம் வயதிலேயே வருமானவரி தாக்கல் செய்தவர். 

இவர் பில்கேட்சின் நண்பரும்கூட.பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷனுக்கு 3.4 பில்லியன் நன்கொடை வழங்கியிருக்கிறார்.அதாவது 21 ஆயிரம்கோடி ரூபாய்.தற்போது 88 வயதாகும் வாரன் பஃபெட் தனக்குப்பிறகு தனது நிறுவனங்களை நிர்வகிக்க அஜித் ஜெயின் என்கிற 63 வயது இந்தியரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்.ஒடிசாவை சேர்ந்த அஜித் ஜெயின் விரைவில் பதவியேற்க இருக்கிறார்.

4. பெர்னார்ட் அர்நால்ட் மற்றும் ஃபேமிலி

சொத்து மதிப்பு 76 பில்லியன்.இவரது துறை லைஃப் ஸ்டைல்.இவருடைய தந்தை சிறிய அளவில் கட்டுமாண துறையில் ஈடுபட்டு இருந்தவர்.1985-ல் கிறிஸ்ட்டியன் டயர் கம்பெனியை 15 மில்லியன் டாலருக்கு வாங்கி களத்தில் குதித்த பெர்நார்டின் LVMH நிறுவனம்,உலகெங்கும் உள்ள ஆயத்த ஆடை முதல் வாசனை திரவியங்கள் வரை நூற்றுக்கணக்கான பிராண்டுகளை கைவசம் வைத்திருக்கிறது.இந்த நிறுவனம் சமீபத்தில் தீவிபத்தில் பாரிசில் எரிந்துபோன நாட்டர்டாம் தேவாலயதின் மறு சீரமைப்புக்கு 220 மில்லியன் டாலர் நிதி கொடுக்க முன்வந்திருக்கிறது.


5) கார்லோஸ் ஸ்லிம் ஹெலு & ஃபேமிலி

சொத்து மதிப்பு 64 பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கிறார்.அமெரிகன் என்கிற லத்தீன் அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கின் உரிமையாளர் கார்லோஸ்.இது தவிர,டெல்மேக்ஸ் என்கிற மெக்சிக்கன் நிறுவனம்,கட்டுமான துறை,ரியல் எஸ்டேட் என்று பல்வேறு துறைகளில் டாலர்களை வாரிக்குவிக்கும் கார்லோஸ் நியூயார்க் டைம்சின் ஷேர்களில் 17% வாங்கி இருக்கிறார்.


6) அமான்சியா ஒர்டேகா

சொத்து மதிப்பு 62.7 பில்லியன் டாலர்.ஐரோப்பாவின் பணக்காரகளில் ஒருவர். உலகின் மிகப்பெரிய சில்லரை வியாபாரி.இவரது பிராண்டுகளை விற்க உலகெங்கும் 7,500 ஷோரூம்கள் இருக்கின்றன.ஒரு வருடத்தில் டிவிடெண்ட்கள் மூலம் மட்டும் 400 மில்லியன் டாலர் பணம் பார்க்கிறார்.பார்சிலோனா, மாட்ரிட் லண்டன்,சிக்காகோ, நியூயார்க் உலகின் அழகான கடற்கரையான மியாமி இங்கெல்லாம் ஓர்டேகாவின் ரியல்எஸ்டேட் வியாபாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறது.


7) லாரி எல்லிசன்

சொத்துமதிப்பு 62.5 பில்லியன் டாலர்கள்.1977-ல் ஆரக்கிள் என்கிற மென்பொருள் நிறுவனத்தை துவக்கியதுதான் எல்லிசனின் ஆரம்பம்.


2014-ல் ஆரக்கிள் நிறுவன சி.இ.ஒ பதவியை விட்டு விலகி,அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் ,சேர்மனாகவும் நீடிக்கிறார்.கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான நெட்ஸ்யூட்டை 2016-ல் 9.3 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்கு 200 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்திருக்கிறார்.இவர், மின்சார கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டெல்சாவின் 3 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருக்கிறார்.


8)மார்க் ஜுகெர்பர்க்

சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலர்கள்.வாடிக்கையாளர்களின் ரகசிங்களை விற்றுவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகள் ஒன்றும் அவர் வளர்ச்சியை தடுத்துவிட முடியவில்லை! மார்க் 2004-ம் ஆண்டு தனது 19 வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவராயிருந்த போது ஃபேஸ்புக்குக்கு துவக்கம் குறித்தார். 2012-ல் அதை பொது பயண்பாட்டுக்கு கொண்டுவந்த காலத்தில் ஃபேஸ்புக்கின் 15% ஷேர் மட்டுமே அவரிடமிருந்தது.இன்றைய நிலவரம் 62 பில்லியன்!


9) மைக்கேல் புளூம்பெர்க்

சொத்து மதிப்பு 55.5 பில்லியன் டாலர்கள்.1996-ல் அமெரிக்க ஷேர்                       மார்க்கெட்டின் தலைமை இடமான வால்ஸ்ட்ரீட்டில் சாலமன் பிரதர்ஸ் வங்கியில் கீழ் நிலை அதிகாரியாக நுழைந்து பதினைந்து வருடம் கழித்து தூக்கி எரியப்பட்டார்.ஆனால் ஷேர்மார்கெட் செய்திகளுக்காக அவர் தொடங்கிய செய்தி மற்றும் மீட்டியா கம்பெனி அவரை உச்சத்துக்கு கொண்டுவந்து சேர்த்தது.

இன்று அவரது வருமானம் ஆண்டுக்கு 9 பில்லியன்.பெரும் கொடையாளரான புளூம்பெர்க் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கும்,சுற்று சூழல் பாதுகாபுக்கும் 5 பில்லியன் டாலர்கள் நிதி கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி வரும் 2020 தேர்தலில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை தோற்கடிக்க 500 மில்லியன் டாலர் செலவிடப் போவதாக அதிவித்திருக்கிறார்.

10)லாரி பேஜ்

சொத்து மதிப்பு 50.8 பில்லியன் டாலர்கள்.கூகுள் நிறுவனத்தின் தாயான ஆல்ஃபபெட்டின் சிம்மாசனத்தில் இருக்கிறார்.1998-ல் தன்னுடன் படித்த செர்ஜி பிரினுடன் சேர்ந்து கூகுள் என்கிற பகாசுர கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருபத்தொரு ஆண்டுகளில் உலகின் பத்தாவது பெரும் செல்வந்தராக ஆலியிருக்கிறார் லாதி பேஜ்.

Jeff Bezos

Wednesday, December 22, 2021

Christmas wishes

 










வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் இணைப்பு

 வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு எனத் தொடங்கி விரைவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் முடிவைப் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதார் கார்டு தொடர்பான வழக்கு ஒன்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இந்தியாவில் 18 வயது பூர்த்தி ஆன ஒவ்வொரு குடிமக்களும் ஓட்டுப் போட உரிமை பெற்றவர்கள் ஆவார். ஆனால் வாக்களிக்க அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கியமாகும். அதே நேரம் இந்த வாக்காளர் அடையாள அட்டையினை ஒன்றுக்கு மேற்பட்டு பலர் வைத்துள்ளனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றது. 

பான், ஆதார் இணைப்பு

இப்படிப்பட்ட நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து நீக்கலாம் என்று முடிவு செய்த மத்திய இதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் இணைப்பு

இதைப்பேலவே வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்களும் இணைக்க வேண்டும் என்று தற்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இங்கு நாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் எண்ணை எப்படி இணைப்பது என்று இங்குப் பார்ப்போம்.

ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முதலில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர்க் கீழ் காணும் படிகளைச் செய்வதன் மூலம் சில நிமிடங்களில் இணைப்பைச் செய்துவிடலாம்.

Monday, December 20, 2021

வாக்காளர் அட்டை

 இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய குடிமக்கள் என்பது வாக்காளர் அட்டை ஒரு முக்கிய சான்றாகும். தேசிய அளவிலான தேர்தல், மாநில அளவிலான தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வாக்களிக்க வாக்காளர் அட்டை பயன்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் ஒரு நபரின் பெயர், வயது, முகவரி ஆகியவற்றுக்கான சான்றாகவும் வாக்காளர் அட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு வாக்காளர் அட்டை மட்டுமே வழங்கப்படும். இரண்டு வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.


இந்நிலையில் வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும்படி விரைவில் அரசு அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2015ஆம் ஆண்டில் வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் வாக்காளர் அட்டை - ஆதார் கார்டு இணைப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு குறித்து அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் இன்னும் போலி வாக்காளர்கள், கள்ள ஓட்டு ஆகியவை பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், இதை தடுக்கும் நோக்கில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டுமென அரசிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Saturday, December 18, 2021

தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு?

 

தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில், UKG மற்றும் LKG வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் இதுவரை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஜன.3ம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து UKG மற்றும் LKG வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, செயலர் இளங்கோவன் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் கடந்த நவ.1ம் முதல் அங்கன்வாடி உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடிகளில் இரண்டரை வயதுடைய குழந்தைகள் மட்டுமே கல்வி கற்று வரும் நிலையில், UKG மற்றும் LKG மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 20 மாதங்களாக ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். இது மாணவர்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை தருகிறது.

பொதுவாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களின் ஆரம்ப கல்வி என்பது அடித்தளம் என்பதால் இனி மேலாவது UKG மற்றும் LKG மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் UKG மற்றும் LKG மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, December 17, 2021

வேலூர் சிறப்பு

 

வேலூர் மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம்

வேலூா் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது 12′ 35′ வடக்காகவும் மற்றும் 79′ 9′ கிழக்காகவும் அமைந்து, தனக்கென தனி வரலாற்று சிறப்பினைக் கொண்டது. வேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நாம் பெருமை மிக்க கடந்த காலத்தை ஆராயும் போது வேலூா் மாவட்டத்தின் சிறப்பான முக்கியத்துவமும், தொடர்பும் நன்கு விளங்கும். மேலும் வேலூா் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகரப் பேரரசர், சம்புவராயர், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், கர்நாடக மற்றும் ஆங்கிலேய நவாப்கள் பிஜப்பூர் சுல்தான் போன்ற பல்வேறு அரசப் பரம்பரைகளால் ஆட்சி செய்யப் பெற்ற பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி.1806ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய்  படுகொலையை சாட்சியாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற நினைவுச்சின்னங்கள் கடந்த காலத்தின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கி.பி.1749ல் நடைபெற்ற ஆம்பூர் போர், கி.பி.1751ல் நடைபெற்ற ஆற்காடு போர், கி.பி.1768-ல் நடைபெற்ற வந்தவாசிப்போர் போன்றவை ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சு போன்ற மேலாதிக்கத்திற்காக நடந்த நீண்ட வெற்றிகரமான போர்களில் வேலூா் மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகிறது.

வேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச்சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையானது எந்நாளில் கட்டப்பட்டது என்ற சரியான விவரம் கிடைக்கப் பெறவில்லை. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும் போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என அறியவருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவ கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபமானது காலத்தை கடந்து நிற்கும் பொறியியல் மற்றும் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. மேலும், வேலூா் நகரின் மற்றொரு அடையாளமாகவும், மருத்துவ உலகின் மையமாகவும் கிருத்துவ மருத்துவக் கலலூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. டாக்டர்.ஐடா ஸ்கடர் என்ற மிஷினரியான அமெரிக்கப் பெண்மனி தன்னுடைய மருத்துவ சேவை புரிவதற்காக கி.பி.1900-ல் ஒரு சிறிய மருத்தவமனையை அமைத்து, அது பின்னாளில் நூறு ஆண்டுகளை கடந்து, முதன்மையான மருத்துவ நிறுவனமாக சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கி.பி.1830ல் வேலூா் மத்திய சிறையானது நிறுவப்பட்டது. இச்சிறையில் சிறந்த முக்கியத்தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களான திரு.இராஜாஜி, திரு.சி.என்.அண்ணாதுரை, திரு.கே.காமராஜ் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களாக திரு.வி.வி.கிரி, திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தங்களது சிறைக்காலத்தை கழித்தனர். வேலூர் – ஆற்காடு சாலையில் அருகந்தம்பூண்டியில் திப்புசுல்தானின் குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட கல்லறை மற்றும் கி.பி.1798 முதல் கி.பி.1815 வரை இலங்கையின் கண்டி நகரை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமக ராஜசிங்கா அரசரை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் எழுப்பப்பட்ட பாலாறு ஆற்றங்கரையில் அமைந்தள்ள முத்துமண்டம் ஆகிய குறிப்பிடத்தகுந்த நினைவுச்சின்னங்கள் ஆகும். இவர் வேலூர் கோட்டையில் 17 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார்.

Thursday, December 16, 2021

ஓமிக்ரோன்

 ஓமிக்ரோன் கொரோனா : Omicron கொரோனா புதிய உருமாறிய கொரோனா என்பதால் உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். முதற்கட்ட ஆய்வுகளில் இது டெல்டா கொரோனாவை காட்டிலும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்தானியாவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு முதல் உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

உலக சுகாதார நிற்வனம் எச்சரிக்கை : இந்நிலையில், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கூறுகையில், "இதுவரை 77 நாடுகளில் Omicron பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை நாம் பார்த்த உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இது லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று மக்கள் நினைப்பது சரியான போக்கு இல்லை. Omicron லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதிக பேருக்குப் பரவும்போது நமது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்படக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் இறுதி : இதேவேளை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (Institute of Genomics and Integrative Biology) நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் அனுராக் அகர்வால்(Anurag Agrawal) கூறுகையில், "ஓமிக்ரோன் கொரோனா தென்னாப்பிரிக்காவில் லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் இதே நிலை இருக்க வேண்டும். ஆனால் லேசான பாதிப்பு கூட சுகாதார கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும். சிறப்பான முடிவுகளை நாம் எதிர்பார்க்கும் அதேநேரம் மிக மோசமான ஒன்றுக்கு நாம் தயாராக வேண்டும். டிசம்பர் இறுதிக்குள் Omicron குறித்துக் கூடுதல் தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் (Gita Gopinath) Omicron குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "ஓமிக்ரோன் வைரஸ் அடுத்த மாதம் அதிக ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக மாறும் ஆபத்து உள்ளது. அதேநேரம் இது டெல்டா கொரோனா உடன் ஒப்பிடுகையில் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. 

கொரோனா தடுப்பூசி முக்கியம்ஓமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். உலகில் உள்ள அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து உருமாறிய கொரோனா தோன்றிக் கொண்டே தான் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

 வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோயில்.  இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும்.  இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்னகிரி பாலமுருகன் கோயில்  மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14வது நூற்றாண்டு புலவர் அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார்.  


பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். 

அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். 

அதன்படி அப்பெண் பக்தை, விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார்.  இச்சம்பவம் நிகழ்ந்த  சில  தினங்களிலேயே  அப்பெண்  கருவுற்றார்.  அதன் பின்னரே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் என அறிந்து கொண்டார் அந்த பெண். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். 

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசன செய்கின்றனர். இரவில் அர்த்த ஜாம பூஜையில் அவருக்கு பாலை நிவேதனமாக படைகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. கீழ் இருந்து படிகட்டுகள் வழியாக சென்றால் மலைமேல் உள்ள முருகன் கோவிலை அடைந்துவிடலாம்.

இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தருகிறார்.  இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலதமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் இன்று கருதப்படுகிறது. 

Tuesday, December 14, 2021

சோளிங்கர் நரசிம்மர் பற்றிய தகவல்கள்

 1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.


2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.

5. உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

6. பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

7. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

8. ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.

9.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும்.

10. வேலூர்-திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

11.காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்.

12. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி.

13. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது.

14. சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

15. ஸ்ரீநரசிம்மர் ‘உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லட்சுமியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் சோளிங்கர் யோக நரசிம்மரை ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்றும் பூசனைச் செய்கிறார்கள்.

16. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

17. ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

18. மலைக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்சலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

19. ஒப்பற்ற திவ்யதேசமான சோளிங்கர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

20. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.

21. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

22. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.

23. புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

24. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


25. இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

26. கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

27. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

28. சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம்.

29. சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

30. தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.

31. பெருமாளுக்கு ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோவில்களில் மொட்டை போடுவது. சில கோவில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

32.பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.

33. இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

34. திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

35. வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானது கடிகாசலம்.

36. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் காணப்படும் இத்திவ்விய தேசம் பற்றிய வரலாறுகள் யாவும் இனிய எளிய தமிழ் நடையில் கூறப்பட்டுள்ளன.

37. வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம்.

38. தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

39. மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கடிகேசனை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

40. பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் எத்தொல்லையும் ஏற்படாது. அதில் நீராடும் புண்ணியவான்களைக் கண்டு அஞ்சி அவை விலகியே நிற்கும்.

41.சோளிங்கர் தலத்தில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜை கள் நடத்தப்படுகிறது.

42. இத்தலத்தில் நரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

43.கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.

44. சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாரம்பரியமாக பூஜை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சோளிங்கர் தலத்து தலைமை அர்ச்சகராக ஸ்ரீதர் பட்டாச்சார்யா பூஜை செய்து வருகிறார்.

45. சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

46 கோவிலின் விமானம் சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் ஆகும்.

47. கோயில்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

48. பெரிய மலையில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு வெள்ளிதோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனமும், கார்த்திகை மாதத்தில் உற்சவமும் நடைபெறுகின்றது.

49. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

50. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் சோளிங்கர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக சென்றால் எளிதான பயணமாக இருக்கும்

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...