Tuesday, November 30, 2021

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது


50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. 

அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.  

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 

அதேபோல், வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை. 

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஒமிக்ரான் வகை வைரசுக்கான அறிகுறிகள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாற்றுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தகவல்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 29, 2021

Probability lesson plan

 Learning objectives: Students will know in detail 

Introduction probability, theoretical and practical probability.

Different types of events like Sure event, impossible event, equally likely event, and occurrence of events.

Random experiment, outcomes, sample space (set representation including one coin, two coin, three coin, four coin, one die, two die, playing cards etc.)

Mutually exclusive events, exhaustive events.

Probability of the events with the special word: 'not', 'or', 'and', 'at least', 'at most'.

Axiomatic probability, connections with other theories of earlier classes.

Learning outcomes:

Students will develop the ability to understand

  1. Define and give meaning of probability.

  2. Correlated probability with real life situation.

  3. Calculate probability through an experiment.

  4. Deduce that probability of Head or Tail is ½ when we increase number of tosses.

  5. Find out the probability of the given events or or conditions by applying the formula. 

  6. Formulate theorems about the concept of probability. 

  7. Calculate probabilities using Conditional probability.

  8. Explain the concept of a random variable and the probability distributions. 

  9. The concept of a random variable

Sunday, November 28, 2021

பிட்காயின் என்றால் என்ன?

 பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.

தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.

  • தமிழகத்தை விட்டு நகர்ந்தது ஒக்கி புயல், வருகிறது புதிய காற்றழுத்தம்
  • இலங்கை: அரிய வகை தந்தம் கொண்ட 'தல பூட்டுவா' யானையைக் கொன்றதாக 5 பேர் கைது.
  • இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. அப்படி பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒன்றாகும். ஆனால், bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.
  • சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் சுவாரசியமானது.

    பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

    தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.தி

  •  உயர்வுக்கு காரணமென்ன?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.
இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.

மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.

"பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்" - ஆய்வு தகவல்
காபி கல்லீரலுக்கு நல்லதா? என்ன சொல்கிறது ஆய்வு?
ஆனால், இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஏற்றம் நிலையானதா?

தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.

மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.

பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.

Friday, November 26, 2021

1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம்

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.


தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், 1.01 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 48 ஆயிரத்து 77; இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,359; இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4,346; மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில், 14 ஆயிரத்து 739.
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில், 28 ஆயிரத்து 209; முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2,397; கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 554; முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 1,474 பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை பெறும் பயனாளிகள், அடையாள சான்றாக தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்போரிடம், ஆதார் எண் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். 

.

Thursday, November 25, 2021

Wipro வேலைவாய்ப்பு

 விப்ரோ நிறுவனம் ஆய்வாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து செயல்முறை விளக்கங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Wipro வேலைவாய்ப்பு:

இந்திய ஐடி நிறுவனமான விப்ரோ நொய்டா வளாகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஆய்வாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கணினி அமைப்பு தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று விப்ரோ தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்ப செயல்முறை குறித்து கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஆய்வாளர் பணிக்கு (Analyst Posts) விண்ணப்பதாரர்கள் BCA, B.SC -IT, B.Sc-CS, BE, B-tech, MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு வருட அனுபவத்துடன் புதியவர்களும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு வருடத்திற்கான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விப்ரோவில் ஆய்வாளர் பணிக்கு தகுதியான பட்டதாரிகள் விப்ரோ கேரியர் அதிகாரப்பூர்வ போர்டலின் https://careers.wipro.com மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இது தொடர்புடைய காலியிடங்களுக்கான விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விப்ரோ நொய்டா மையத்தில் பணிபுரிய வேண்டும்.

எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் பதிவு:

விப்ரோ நிறுவனத்தில் சமீபத்தில் எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் 2021 (NTH)க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையை நடத்தி முடித்துள்ளது. எலைட் என்டிஎச்-2021 டிரைவ் நாடு முழுவதும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் பதவிக்கு 2021 பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து சிறந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் திட்டம் ஆகும். பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றவர்கள் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Wednesday, November 24, 2021

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காலியிடங்கள். 

பல்கலைக்கழக பணி வாய்ப்பு:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.

தகுதிகள்:

MKU பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow பணிகளுக்கு 88 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் P.G degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/ அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆகவே, விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 24ம் தேதியான நாளை இறுதி நாளாகும். எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, November 23, 2021

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

 

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்ன சேர்த்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் திட்டமிட துவங்கி விடுகின்றனர். ஏனென்றால் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் பணம் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதனால் குழந்தைகள் வளரும் முன்னமே அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு சேமித்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெற்றோர்களிடையே பரவலாக காணப்படுகிறது.

இப்போது குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளை துவங்க திட்டமிட்டிருப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் சேவைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இந்த பதிவில் ஆண் குழந்தைகளுக்கான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் சிலவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக பப்ளிக் ப்ரொவிடன்ட் பண்ட் என்று சொல்லக்கூடிய PPF கணக்கு, 15 ஆண்டுகள் சேமிப்பு திட்டத்துடன் வருகிறது.

இந்த திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை பொருத்தளவு, 7.1 சதவீதம் வட்டியுடன் வருவாய்க்கு வரி விலக்கும் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகையும் கொடுக்கப்படுகிறது. அதனால் இந்த சேமிப்பில் பணம் செலுத்துபவர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்கால கல்வியை சிறப்பாக அமைக்க முடியும்.

அடுத்ததாக போஸ்ட் ஆபிஸின் ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ மூலமாக கணக்குதாரர்கள் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளலாம். இந்திய அஞ்சல் துறையின் இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டுக்கு 12 முறை என ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதியாண்டு கணக்கின் படி, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பு 8.1% வட்டியுடன் வருகிறது. தொடர்ந்து போஸ்ட் ஆபிஸின் அடுத்த திட்டம் ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ் சேமிப்பு திட்டங்களில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஈக்விட்டி சேமிப்பு, நிதி முதலீட்டாளர்களை அனைத்து பங்குகளையும் வாங்க அனுமதிக்கின்றது. இந்த நிதி திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்தால், அந்த நிதியின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் விலை நிகர சொத்து மதிப்பு இல்லை. அதாவது இந்த நிதியின் NAV கணக்கீடு மூலம் நிகர சொத்து மதிப்பு பெறப்படும். அதனால் இந்த ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டம் நீண்ட காலத்திற்கு செய்யப்படும் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் இதில் சில அபாயம் இருப்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Monday, November 22, 2021

டெல்டா பகுதி என்றால் என்ன?

 டெல்டா பகுதி என்றால் என்ன?

ஒரு ஆறு மலையில் தோன்றி கடலில் கடக்கும், மலைப்பகுதி சரிவாக உள்ளதால் மிகவும் வேகமாக ஓடும் அப்போது அதன் வழியில் உள்ள அனைத்தையும் அடித்து நொறுக்கி தன்னுடன் எடுத்துச் செல்லும். மலையடிவாரம் கடந்து சமதள பகுதியை அடையும் போது அதன் வேகம் குறையும் அப்போது பெரிய அளவு பாறை மற்றும் கல் ஆகியவை அங்கேயே இட்டு தன் பயணத்தைத் தொடரும். அந்த ஆறு கடலினை அடையும் போது மிக மெதுவாக நகரும் அப்போது அந்த ஆறு தன்னுடன் கொண்டு வந்த மணல்கள், வண்டல் மற்றும் களிமண் அனைத்தையும் விட்டுச் செல்லும் பல கிளைகளாகவும் பிரிந்து செல்லும் அந்த உருவமைப்பு பார்க்க கணிதத்தில் உபயோகிக்கும் ∆ போன்று இருக்கும் எனவே அந்த நிலப்பகுதியை டெல்டா எனக் கூறுவர்.


கழிமுகம் (டெல்டா) என்றால் ஒரு முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். அங்கு ஒரு நதி பிரிந்து கடலுக்குள் நுழைவதற்கு முன்பு பல கிளைகளாக பரவுகிறது.

இப்பகுதியில் தண்ணீர் நன்றாக இருப்பதால் இங்கு வயல் நிலங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக நெல் வயல்கள்.

கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா, வங்காளதேசத்தின் பெரும்பகுதியிலும், மேற்கு வங்காளத்திலும் பரவி, இந்தியா வங்காள விரிகுடாவில் கலக்கிறது, இது உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.

தமிழில் நாட்டில் மிக முக்கியமான ஆறு காவிரி என்பதினால், இந்த ஆறு கடைசியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் போய் டெல்டாவாக மாறுகிறது.

Sunday, November 21, 2021

தமிழக வனத்துறையில் வேலை

 தமிழக வனத்துறையில் ஊதியத்தில் வேலை 

தமிழக வனத்துறையில் இருந்து Internship Programme, Junior Research Fellowship காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்

தமிழக வனத்துறையில் இருந்து Internship Programme, Junior Research Fellowship பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:

Junior Research Fellowship – அதிகபட்சம் 28 வயது

Internship Programme – அதிகபட்சம் 30 வயது.

தமிழக வனத்துறை கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research Fellowship – Research பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Internship Programme – 1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
தமிழக வனத்துறை ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் aiwcrte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். அதற்கான கடைசி தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Internship Programme – 30.11.2021
  • Junior Research Fellowship – 05.12.2021


Saturday, November 20, 2021

இந்திய அஞ்சல் துறையில் வேலை

 இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Technical Supervisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 காலிப்பணியிடங்கள்:
  • உதவி மேலாளர் – 23
  • தொழில்நுட்ப மேற்பார்வையாளர் – 6
வயது வரம்பு:

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் துறை மாத சம்பளம்:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் Level-7 ன் ஊதிய விவர படி, மாதம் ரூ.9300-34800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவைர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

.

Vishal promised to financially support the 1800 students who were earlier funded by Puneeth Rajkumar

 Sandalwood star Puneeth Rajkumar’s untimely demise on Friday, October 29 left many in shock, with fans, colleagues and friends mourning the death of the actor on social media. Actor Vishal, who was a good friend of Puneeth’s, announced that he would take care of the 1,800 students whose education was being funded by the late actor. Vishal announced this at the pre-release event of his upcoming film Enemy, which co-stars Arya in the lead.

“Puneeth Rajkumar was not just a good actor but was a good friend too. I haven’t seen such a down-to-earth superstar like him. He was doing lots of social activities. I promise to take care of the 1,800 students who are getting free education from Puneeth Rajkumar from next year,” Vishal said at the pre-release event of Enemy that took place in Hyderabad.

Puneeth Rajkumar, son of legendary Kannada actor Dr Rajkumar, was laid to rest with state honours in the presence of family, friends, elected representatives and fans at the Kanteerava Stadium in Bengaluru on Sunday, October 31.

The multifaceted actor was known to endorse several social causes free of cost. Education being a cause close to his heart, he sponsored the fees of thousands of students every year and also extended financial assistance to several Kannada medium students in the state. In 2013, he was roped in as a brand ambassador, along with actor Radhika Pandit, to urge students to utilise the vacant seats available in the Right to Education (RTE) quota. As brand ambassador for Sarva Shiksha Abhiyan, Puneeth worked towards reducing drop-out rates in schools.

Meanwhile, Vishal and Arya starrer Enemy is set to release on November 4 in Tamil and Telugu, on the occasion of Deepavali. Helmed by Anand Shankar, the film also stars actors Mamta Mohandas, Prakash Raj and Mrinalini Ravi in important roles.

Thursday, November 18, 2021

குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு

 குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில்  வேலை வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பிக்கும் நபர்கள் குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அஞ்சல் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

வேலையின் பெயர்: தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (Child Welfare Committee, Chairperson)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை: Child Welfare Committee, Chairperson பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது விவரம்: குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Child Welfare Committee – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social WorkChairperson – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social Work

பணியிடம்: தேனி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16/11/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26/11/2021 at 5.45 PM

விண்ணப்ப முறை: அஞ்சல் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The District Child Protection Officer,District Child Protection Unit,District Block Level Officer Building – IICollectorate Campus,Theni – 625 531


Wednesday, November 17, 2021

இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்

 இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆனது அங்கு காலியாக உள்ள Junior Technical Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாதத்தில் வெளியானது. இந்த Junior Technical Assistant (JTA) பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSIR IICT வேலைவாய்ப்பு விவரங்கள் :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருத்தல் அவசியமானதாகும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் 17.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையொடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

.

Tuesday, November 16, 2021

தமிழக சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு

 தமிழக சத்துணவு துறையில் உதவியாளர்‌ வேலைவாய்ப்பு

கணினி உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்ப புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌, புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கணினி உதவியாளர்‌ பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால்‌ ஒரு பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. கணினியில்‌ M.S.Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. இளநிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. இந்த அரசு பணியானது முற்றிலும்‌ தற்காலிகமானது. பணியாளர்‌ வேலை திருப்திகரமாக இருப்பின்‌ இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள்‌ 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது


Sunday, November 14, 2021

வேலூர் சிறுவன் அமெரிக்காவில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

வேலூர் சிறுவன் அமெரிக்காவில் புத்தகம் 

அறிவியல் துறையில் ஆர்வத்துடன் விளங்கும் வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அமெரிக்காவில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

'India book of records, 'Asia book of records நிறுவனங்கள் இப்புத்தகத்தை அங்கீகரித்து மாணவனுக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவித்துள்ளன.

பருவநிலை மாற்றத்தை குழந்தைகள் வரை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், விளையாட்டு தீம் வடிவில் புத்தகம் ஒன்றை எழுதி அதனை அமெரிக்காவில் வெளியிட்டு அசத்தியுள்ளார் வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர் வேலூர் அருகே அரியூர் காந்திசாலையைச் சேர்ந்த சுபாஷ். இவரது மனைவி தேவி. இந்த தம்பதியின் மகன் சிரிஷ்சுபாஷ்(10), அமெரிக்காவில் உள்ள மரியெட்டா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு அகாடெமிக்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதலே அறிவியல் மீது தனியாத ஆர்வம் கொண்டுள்ள சிரிஷ், அவரது ஆசிரியர் ஏஜ்ஜலா ஹெர்பலால் அறிவியல் சார்ந்த விஷயங்களைப் படித்திட ஊக்குவிக்கப்பட்டார். 

தொடர்ந்து இணையம் வழியாக அதற்கான அறிவுத்தேடலை கொண்ட சிரிஷ், தனது 6 வயதில் பருவநிலை மாற்றம் குறித்த 'பிஃபோர் தி ஃப்ளட்'  எனும் ஆவணப் படத்தைப் பார்த்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஏற்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த சிந்தனையை அடுத்து 2018 ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் விழாவில், அனைவரும் முறையாக ஆற்றலை சேமிக்க வேண்டும், தேவையின்றி மின்சாதனைகளை பயன்படுத்தக் கூடாது, அவற்றை தேவை இல்லாதபோது அணைத்து வைக்க வேண்டும்' என்பது குறித்து சிறு உரை நிகழ்த்தினார். மேலும், பருவநிலை மாற்றம் குறித்து மாநில அளவில் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.

இதன்தொடர்ச்சியாக, பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள் குறித்து பலருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிரிஷ், கார்பன் ப்ளாக் பஸில்  என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். எட்டு வயதில் எழுதத் தொடங்கிய இந்த புத்தகத்தை 10 வயதில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

மொத்தம் 94 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 11 தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மூலம் பருவநிலை மாற்றம், அவற்றுக்கான காரணம், அவற்றுக்கான தீர்வு குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் இப்புத்தகத்தை உலகம் முழுவதும் மக்கள் வாங்கிப் படிக்கின்றனர்.

10 வயது சிறுவன் எழுதி வெளியீட்டுள்ள இந்த புத்தகத்தை அங்கீகரிக்கும் விதமாக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனங்கள் மாணவன் சிரிஷ்சுபாஷ்க்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கெளரவித்துள்ளன.

இதுகுறித்து மாணவன் சிரிஷ்சுபாஷ் கூறியது: இந்தப் புத்தகம் பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள், அதனை எப்படித் தடுப்பது என்பது குறித்ததாகும். இப்புத்தகத்தை டெட்ரிஸ் எனும் விளையாட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். இவ்வாறாக புத்தகம் எழுதுவதால் பருவநிலை மாற்றம் குறித்து குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினர் வரையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னை. இந்தியாவில் இது தீவிரமாகவே உள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் பூமியின் தட்பவெப்ப நிலை பாதிக்கப்படுகிறது. இதனால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து அதன் மூலம் சுற்றுச்சூழல் மிகப்பெரியளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு ஒரே தீர்வு 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதே ஆகும். இதனை இப்புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரும்பாலான கடலோரப் பகுதிகள் கடல்மட்ட உயர்வால் வெகு விரைவிலேயே நீரில் மூழ்கும் இடர்பாடு உள்ளது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாக அதீத செயல்திறனுடன் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன. கிட்டத்தட்ட 50 சதவீத செயல்திறனுடன் தாவரங்கள் இதனைச் செய்து முடிக்கின்றன. இந்தச் செயல்திறன் குறைவாகத் தெரியலாம். தற்போது நாம் பயன்படுத்தும் சூரிய ஒளித்தட்டுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் தாவரங்களின் இந்தச் செயல்திறன் அதிகம். எனவே, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின் மூலமாக சூரிய ஒளியினை மின்சாரமாக மாற்றும் திட்டத்தினைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

வருங்காலத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக விரும்பும் சிரிஷ்சுபாஷ், உலகில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அண்டவியல் தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளை படித்து கிராண்ட் யூனிஃபைட் தியரி குறித்து ஆய்வு செய்யவும் விரும்புகிறார். இவர் நூலகத் தேவைக்காக செசாட் என்ற பெயரில் ரோபோவும் தயாரித்துள்ளார். தவிர, SciKid Sirish என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனலும் தொடங்கி அதில் அறிவியல் தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரது நுண்ணறிவுத் திறனை  கண்டு வியந்த பள்ளி நிர்வாகம், சிறுவனுக்கு நான்காம் வகுப்பிலிருந்து நேரடியாக ஆறாம் வகுப்புக்கு சேர்க்கை அளித்துள்ளது. இயல்பாக ஒருவரின் ஐ.கியூ. அளவு சராசரியாக 110 இருக்கும், ஆனால் சிரிஷுக்கு 152 ஆக இருந்தது என்கிறார் மாணவரின் தந்தை சுபாஷ்.

Saturday, November 13, 2021

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

  மத்திய அரசு வேலைவாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆன DRDO நிறுவனத்தில் இருந்து Senior Account Officer பதவிக்கு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

DRDO நிறுவனத்தில் இந்த Senior Account Officer பதவிக்கு என 09 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த Senior Account Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை கொண்டவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (08.01.2022) அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DRDO கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Thursday, November 11, 2021

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ?

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ௭ன்றால் ௭ன்ன? 

பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது.

இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது. இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது. 

காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.

புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். 

அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது. 



Tuesday, November 9, 2021

உங்கள் மாவட்டத்தில் ௭ன்ன அலர்ட்?


வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுதினம் சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதீத கனமழைக்கான வாய்ப்பு இருந்தால் பெய்வதற்கான வாய்ப்பு இருந்தால் 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்படும். ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், மிக கனமழை

நாளை (10ம் தேதி) - சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாள்(11ம் தேதி) - ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள்(11ம் தேதி) - ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் காரைக்கால் 

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 

நாளை(10ம் தேதி) - கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,

திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு நாளை மறுநாள்(11ம் தேதி) -கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...