Friday, October 22, 2021

ஏன் வந்தது? இடப்புறமாக ஓட்டுதல் முறை

 பக்கம் பார்த்து ஓட்டு வண்டியை

வாகனங்கள் மழைக் காளான்களைப் போல பெருத்துவிட்ட இன்றைய நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில மாநிலங்களையும், தென் அமெரிக்காவின் சில நாடுகளையும் தவிர சாலைப் போக்குவரத்து பெரும்பாலும் சாலைகளின் இடப்புறமாக ஓட்டுதல் முறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலையின் இடப்புற ஒட்டுமுறை எந்த நவீனப் போக்குவரத்து வல்லுநரால் உருவாக்கப்பட் டிருக்கக் கூடும் என்று யோசித்த துண்டா நீங்கள்?

பதிலாக இது மிகப் பழைய முறை என்று தெரியவருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் விக்டோ ரியா மகாராணியார்

காலத்திலேயே இங்கிலாந்து நாட்டில் இந்த இடப்புறம் ஓட்டும் சாலை விதிமுறை பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அப்போது குதிரைகள் பூட்டிய கோச் வண்டிகளைத்தான் அரச குடும்பத்தாரும், பிரபுக்களும் வாகனங்களாகப் பயன்படுத்தி வந்தனர். இத்தகைய கோச் வண்டிகளில் ஓட்டுனர் இருக்கை வாகனத்தின் வலப்புறமே எப்போதும் அமைந்திருப்பது வசதியாகவும், மரபாகவும் இருந்தது. வண்டி ஓடும்போதெல்லாம் குதிரைகளை அதட்டி ஓட்டுங்கால் ஓட்டுனர் கையிலுள்ள சவுக்கு சாலையின் வலப்புறம் உள்ள வேலிகளிலோ, மரக்கிளைகளிலோ சிக்கித் தொல்லைகளும், சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.

அரச குடும்பத்தினரும். பிரபுக்களும் பயணம் செய்கையில் இத்தகைய நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டிய அவசியமாயிற்று. தொடர்ந்து ஏற்பட்டு வந்த இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் வலப்புறமாக ஓட்டிவந்த வண்டி, வாகனங்கள் அனைத் துமே சாலையின் இடப்புறம் ஓடும் வகையில் போக்கு வரத்து விதிகள் அன்றே இங்கிலாந்து நாட்டில் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் இச்சாலை விதிகளையே தொடர்ந்து அனுசரித்து வந்தது. வெள்ளையர் மரபுகளும், பழக்கங்களும்தான் உலக நாடுகளால் பெரும் போட்டியுடன் கடைப்பிடிக்கப்படுவது வழக்கமாயிற்றே. நம் நாட்டிலும் வழக்கம்போல இந்தச் சாலை விதியும் அப்படியே பரவிவிட்டது. இன்றும் மூல காரணம் தெரியாமல் இப்பழக்கத்தை நாம் தொடர்ந்து வருகிறோம்.

1 comment:

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...