Sunday, December 12, 2021

விரிஞ்சிபுரம்

 வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்திமிக்க மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. புகழ்மிக்க இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது. 

தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவர் சிறப்பை அறியலாம். கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது.

கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது. 

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். நெய் தீபம் ஏற்றலாம். 

சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றைச் செய்யலாம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி, வரும் 14-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக் குளம் திறக்கும் விழா நடைபெறுகிறது. 

15-ம் தேதி காலை பிரம்மக் குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிம்மக் குளத்தில் நீராடுவார்கள் என்பதால் கடை ஞாயிறு விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துவருகிறது

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...