Friday, December 24, 2021

பொங்கல் பரிசுத்தொகுப்பு

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இதேபோல் புதுவை அரசும் இவ்வாறு வழங்க திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதுவையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. அதையடுத்து இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பாப்ஸ்கோ நிறுவனத்திடம் இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 30-ந் தேதி மதியம் 1 மணியுடன் முடிவடைகிறது

புதுவையில் பொங்கல் பரிசுத்தொகுப்பானது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மஞ்சள்-100 கிராம், பச்சரிசி- 2 கிலோ, கடலை பருப்பு- 1/2 கிலோ, துவரம் பருப்பு- 1/2 கிலோ, உளுந்து- 1/2 கிலோ, பச்சைப்பயறு- 1/2 கிலோ, வெல்லம் -1 கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்-10 கிராம் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகுப்பானது 3 லட்சத்து 31 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு 7 பைகள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த 10 பொருட்களையும் தனித்தனியாக பார்சல் செய்து பின்பு அதனை ஒட்டுமொத்தமாக ஒரே பையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது அனைத்தும் பாப்ஸ்கோ நிறுவனம் மூலமாக புதுவை, காரைக்கால், மாகி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுவை அரசு பொங்கல் தினத்துக்குள் இந்த பரிசு பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆதலால் இந்த ஆண்டாவது பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...