Thursday, January 27, 2022

உண்மையா

 அறுக்கலாம் வாருங்கள்



அந்தக் காலத்தில் வைத்திய முறையில் எந்த வகை நோய்க்கும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டது. உறுப்பு உபாதைகள், உடல் ஊறுகள், கட்டிகள் போன்ற கோளாறுகளுக்கும் இதே வித உள்மருந்து, சூரணம், லேகியம் போன்ற வைத்தியம்தான். உபாதை உண்டாக்கும் கட்டிகள், உறுப்புப் பகுதிகள் அந்நாட்களில் உடலில் இருந்து அகற்றப்படாமல் மருந்து மூலம் குணமாகிவிடும் என்றே நம்பப்பட்டதால் கொடிய நோயுற்றோர் பலர் அதிக எண்ணிக்கையில் இறந்து வரலாயினர். பின்னர் சிகிச்சை முறைகள் 16-ஆம்

அறுவை நூற்றாண்டில் துவங்கப்பட்டன. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த ஒரு சிறு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த முதல் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்ட உபகரணங் கள் ஒரு எரியும் மெழுகுவர்த்தியும், குறடு ஒன்றும். நோயாளி வலி மிகுதியால் துள்ளி விழாமல் அழுக்கிப் பிடித்துக்கொள்ள இரண்டு வேலையாட்களும்தான். சில காலம் கழித்து விஞ்ஞான வளர்ச்சியை ஒட்டிப் படிப்படி யாக மருத்துவமும் முன்னேற, அறுவை சிகிச்சை முறைகளும் மிகவும் முன்னேறிப் பிரபலம் அடைந்தது. உறுப்புகளை மாற்றி வைத்துத் தைக்கும் அளவுக்கு அறுவை சிகிச்சைகள் முன்னேற்றம் பெற்றன. இம்முன் னேற்றத்திற்கு ஒரு மைல் கல்லாக சில ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் டாக்டர் கிறிஸ்டி யன் பெர்னார்டு செய்த அறுவை சிகிச்சை விளங்கியது.


இது ஒரு மிகச் சிறந்த, கடினமான அறுவை சிகிச்சை என ஒப்புக்கொள்ளாத மருத்துவ நிபுணரே உலகில் எவரும் இல்லை. ஆனால் இதனைவிட 'மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று அமெரிக்காவில் நடந்தது. ஆமாம்! அளவில் 'பெரிய' இந்த அறுவை சிகிச்சையில் 90 கிலோ எடையுள்ள கருப்பைக் கட்டி ஒன்று 30 வயதுப் பெண்மணி ஒருத்தியின் வயிற்றில் இருந்து கலிபோர்னியாப் பல்கலைக் கழக மருத்துவர்களால் அகற்றப்பட்டது. ஏழு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவால் 1978-ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் வெளிப்பட்ட கட்டி 74 லிட்டர் நீராக உடைந்து வெளியேறிய பின்னும் 18 கிலோ எடையுள்ள சதைப் பிண்டமாக இருந்தது. 172 கிலோ எடையிருந்த நோயாளிப் பெண் சிகிச்சை முடிந்ததும் 82 கிலோ எடையாகக் குறைந்துவிட்டாள் என்றால் இது எவ்வளவு 'பெரிய அளவில்' நடந்த அறுவை சிகிச்சை என்று புரிந்து கொள்ளுங்கள்.

கண்டம் தாண்டிப் போக்குவரத்து



சென்னைக்கு அருகிலுள்ள வேடந்தாங்கல் என்ற பறவைகள் சரணாலயம் நாம் அனைவரும் கண்டும், கேட்டும், அறிந்தும் வரும் ஓரிடமாகும். குறிப்பிட்ட மாதத்தில் அங்கு வருகை புரியும் குறிப்பிட்ட ஒரு பறவை வகை சில வாரங்கள் கழித்து தம் இடம் நோக்கிச் சென்று விடுகிறது. பெரும்பாலும் இவை எங்கு திரும்பிச் செல்லுகின்றன தெரியுமா? இங்கிருந்து 4000 மைல்கள் தொலைவுள்ள மத்திய இத்தாலிப் பகுதிக்கு! இவ்வளவு தொலைவு மிகத் துல்லியமாகப் பறந்து வந்து, இருந்து. திரும்பும் சக்தியை இப்பறவை இனங்கள் எங்கிருந்து பெற்றன?


இந்தக் கண்டம் விட்டு கண்டம் தாவும் பறவைகளில் 'பிளாக்போல்' என்ற வட அமெரிக்கக் கண்டத்துப் பறவை மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இவை வட அமெரிக்க நாட்டின் வட பகுதியிலுள்ள கனடா நாட்டுப் பகுதியை ஒட்டிய ஏரிக்கரைகள் அருகிலிருந்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடிக்குச் சுமார் 3700 மைல் தூரத்தை சிறிதும் நில்லாமல் தொடர்ந்து 32 நாட்களில் அடைந்து விடுவதோடு இந்த 86 மணி நேரம் பறக்கும் பயணத்தில் சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக 7000 மீட்டர் உயரத்துக்கும் மேலாக பிராணவாயு மிகக் குறைந்த மண்டலத்தின் வழியே பறந்து வருகிறது.


இப்பறவையின் இரத்தம் பிராணவாயுவை காற்றி லிருந்து பிரித்து நுரையீரல்களுக்கு அனுப்பக் கூடியது. இதன் புலனறிவுச் சக்தியும், கேட்கும் திறனும் மிக மிகத் துல்லியமானது. கடற்கரைப் பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பினால் நடுக் கண்டத்தின் மேல் பறந்துகொண்டு இருக்கும்போதே குறைந்தது 1000 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் இருந்தாலும்கூட அதனைப் புலனறிவால் புரிந்துகொண்டு கடல் இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பறக்கத் தொடங்குகின்றன இப்பறவைகள். இவ்வாறு நீண்ட தூரம் பறப்பதற்கு முன்னேற்பாடாக கொழுப்புப் பொருட்களை தனது சிறகுகளுக்குக் கீழுள்ள தசையில் எரிபொருளாகச் சேமித்து வைத்துக் கொள்கின்றனவாம்.


வருடத்தில் சூரியன் அதிக நேரம் சஞ்சரிக்கும் நாட்கள் பகல் குறுகி அந்த நீண்ட நாட்கள் என்றும், 12 மணி நேரப் 12 மணிக் காலத்துக்கும் குறைவாக சூரியன் சஞ்சரித்தால் குறுகிய நாட்கள் என்றும் காலநிலை அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். பொதுவாக கோடையில் நீண்ட நாட்களும், பனிக்காலத்தில் குறுகிய நாட்களும் வருவது உண்டு. நாட்கள் நீள்வதும், குறுகுவதும் பறவைகளின் 'பினியல்' மற்றும் 'பிட்யூட்டரி'ச் சுரப்பிகளை தூண்டுவ தால் இப்பறவைகள் ஓரிடத்தில் தங்க இயலாது பரபரப்புக்கு ஆளாகிறது. இப்பரபரப்பே நீண்ட பயணங் களை மேற்கொள்ள பறவைகளைத் தூண்டுகிறதாம். எப்படியோ, இந்த நீண்ட பயணம் ஒரு தனிச்சிறப்புத் தன்மைதான்.


சென்னையில் நுங்கம்பாக்கம் செல்ல நாலுமுறை வழி விசாரித்துச் செல்லும் ஆறறிவு படைத்த மனிதன் முன்னால், ஐரோப்பாவின், இத்தாலியின் மத்திய பகுதித் தமிழகத்தில் செங்கை மாவட்டத்து மதுராந்தகம் தாலுகாவின் வேடந்தாங்கல் கிராமத்துக்குச் சரியாக வந்து வருடா வருடம் திரும்பிச் செல்லும் இப்பறவைகள் நெஞ்சை நிமிர்த்திவிட்டுக் கொண்டு பறக்கலாமே.


பயமே பகைவன்


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது மிகத் தெளிவான உண்மை. 'பாம்பு' என்ற சொல்லே பலரையும் பீதி அடையச் செய்துவிடுகிறது. 'பாம்ப' என்ற சொல் காதில் விழுந்தவுடன் விஷம் தலைக்கேறி தான் இறந்துபோவது போன்ற கற்பனைகள் நம்மிடம் மிகவும் அதிகம்.


ஆனால் சென்னை, கிண்டி பாம்புப் பண்ணையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறும் அனுபவப்பூர்வமான உண்மை என்ன என்றால் நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு 135 பாம்புகளுக் குள் ஒன்றே ஒன்றுதான் விஷத் தன்மை யுடன் கடிக்கக் கூடியது. இருக்கின்ற பாம்பை எல்லாம் விஷப் பாம்பாக நினைத்து பயப்படுவது மனிதனின் அதீதமான கற்பனை சக்தியையே குறிக்கிறதாம். அதைப் போலவே மனிதனை மிகப் பீதியில் ஆழ்த்துகின்ற மற்றொரு சொல் புற்றுநோய், புற்று நோயை மிகக் கொடியதாக நாம் கற்பனை செய்து வைத்துள்ள அளவுக்கு அந்த நோய் கொடியதல்ல. மாரடைப்பு நோயால் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 450 பேர் இறக்கின்ற நம் நாட்டில் புற்றுநோயால் ஒரு லட்சத்துக்கு 120 பேர் மட்டுமே இறக்கின்றனர். அவர்களிலும் 30 பேர் தொடர்ந்த புகையிலைப் பழக்கத்தால் அந்த நோயை வரவழைத்துக் கொண்டவர்களே.


மேலும் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சைகள் வேறு நோய்களுக்குக் கிடையாது. எலும்புருக்கி, இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய் இவற்றைப்போல அல்லாமல் புற்றுநோய் பரம்பரை நோய் அல்ல. மலேரியா எனும் முறைக் காய்ச்சல், வாந்திபேதி, அம்மை, எலும்புருக்கி போன்று தொத்து வியாதியும் அல்ல புற்றுநோய். எனவே நாம் பாம்பு என்ற சொல்லுக்கு அளவுக்கதிகமாக பயப்படுவது போல 'புற்றுநோய்' என்ற வார்த்தைக்கும் தேவைக்கு அதிகமாக நடுங்குகிறோம் என்பதில் ஐயமில்லை. இந்த அச்சத்தைக் களைவோம்.

ஒன்றுக்குள் ஒன்று



மிகப் பிரம்மாண்டமான ஆலமரத்தின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் மிகச் சிறிய விதை ஒன்றே காரணமாகிறது. மண்ணில் இயற்கையாக விதை விழுவதும், செயற்கையாக நாம் விதைகளைத் தூவுவதும் புதிய தாவரங்களையும், பயிர்களையும் நமக்கு பூமி தருகிறது. 'விதை ஒன்று போட்டால் செடி ஒன்றா முளைக்கும்', 'அவரை போட்டால் துவரையா கிடைக்கும்' என்பனப் போன்ற பல பழமொழிகள் மண்ணில் விதை விழுந்து முளைப்பதே செடி வளர்ச்சியின் முதல் நிலை என்று நமக்குப்  முளைக்கும் அதிசயத்தைக் கேட்டிருக்கிறீர்களா நீங்கள்?"


கடற்கரை ஓரங்களிலும், உப்பங்கழிகளின் கரைகளிலும், நதி கடலுடன் கலக்குமிடங்களிலும் காணப்படும் 'ரைசோ போரா' என்ற தாவரத்தின் விதைகள், கனிகள் உள்ளிருக்கும் போதே முளைவிட்டு அதன் முளைவேர் கனியைக் கிழித்துக் கொண்டு வெளியேறி ஈட்டிபோலக் கனிக்கு வெளியே முளைத்து வரும். முளைக் குருத்துக்களும் பின்னர் முறையே வேர், தண்டு போன்ற பகுதிகளை உண்டாக்கி வளர்ந்து வருகிறது. இது அதிசயத்திலும் அதிசயம். இவ்வாறு கனிக்குள் விதை முளைக்கும் தாவரங்கள் உலகில் மொத்தம் அரை டசனுக்கு மேலே உள்ளன.

ராட்சசச் சாப்பாடு



பண்டைய நாட்கள் வழங்கி வந்த பாட்டிக் கதைகளில் பெரிய அரக்கர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இக் கதைகளில் சில அரக்கர்கள் ஒரு ஊரைப் பிடித்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு ஒரு ஆளும், ஒரு வண்டிச் சாப்பாடு கறி வகைகளும், வண்டி மாடுகளும் தவறாது தினசரி உணவாக அனுப்ப வேண்டும் என நிபந்தனை விடுக்கின்ற சமாசாரங்களைக் கேட்டு இளம் வயதில் வியந்திருப்போம் அல்லவா? நாம் அப்போதெல்லாம் பல பேருக்கான உணவை ஒரே ஆள் தின்றுவிடுவதா என்றெல்லாம் ஆச்சரியப்படுவதுண்டு. இப்படிப்பட்ட நிலை செடி, கொடிகளில் உண்டா? உண்டு. நிச்சயமாக உண்டு.


‘தைல மரம்' என்று செல்லமாக அழைக்கப்படும் 'யூகலிப்டஸ் மரம்’ தெரியுமா? வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் அழகுக்காகவும், மணத்துக்காகவும்  மரம் வைக்க நினைக்கும்போது முடிந்தவரை ‘யூகலிப்டஸ் மரத்தை ஒதுக்கிவிடுவது நல்லது. ஏனென்றால் இம்மரம் 8 மரங்களுக்குத் தேவையான நீரைத் தானே உறிஞ்சி ஆவியாக்கி விடுகிறது. இதனால் அதே தோட்டத்தில் இம்மரத்தை அடுத்துள்ள மற்றத் தோட்டத் தாவரங்களின் நீர்த் தேவை மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த யூகலிப்டஸ் மரத்தின் பெருங்குடிப் பழக்கத்தால் தோட்டத்திலுள்ள தரையடி நீர் அளவும் மிகக் கணிசமாகக் குறைந்து விடுகிறது. தோட்டத்தில் இம்மரங்கள் வளர்ப்பதை கைவிட முடியாதவர்கள் அதிக நீரை இம்மரத்துக்கு ஊற்ற வேண்டும்.


தீக்குள் விரலை வைத்தால்


'அந்தச் செய்தி காட்டுத் தீ போலப் பரவியது' என்ற சொல் தொடர் நமக்குப் பழக்கமானது. காட்டுத் தீ மட்டும் எப்படி இந்த வேகத்தில் பரவுகிறது என்று கேட்டான காட்டில் உள்ள காய்ந்த மரங்கள் நெருக்கமா இருப்பதனால் தீப்பற்றி நன்கு பரவுகிறது என்பதே பதில் அடுப்பில் சாதாரண சவுக்குக் கட்டைகள் எரியும் வேகத்ன நாம் பார்க்கும்போது காட்டு மரங்கள் எரியும் வேகத்தை நாம் எளிதாகக் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அமெரிக்க நாட்டிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதி களிலும் உள்ள சில காடுகளில் தீப்பிடிக்காத மரங்களும் உள்ளன. அவை பைனஸ் பாலுஸ்டிரிஸ், மற்றும் பான்டரோஸா லாடி போலியா என்று அழைக்கப்படும் விசித்திர மரங்களாகும்.

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...