Sunday, January 9, 2022

காங்கிரசிலிருந்து காந்தி விலகல்

 Planb4teach வாசகர்களுக்கு வணக்கம். 

இன்று நாம் காணவிருப்பது இந்திய வரலாற்றுச் சுவடுகளில் முக்கியமான  நிகழ்வுகளில் ஒன்றான காங்கிரஸிலிருந்து காந்தி விலகியதற்கு காரணத்தை விரிவாக காணப்போகிறோம். 

நம் இந்திய நாடு சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் அந்நியரிடம் அடிமையாக இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. நமது அடிமை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின்போது பல்வேறு நிகழ்வுகள்  நடைபெற்றது அத்தகைய நிகழ்வுகளில் முக்கியமானதாக கருதப்பெறும் இந்திய சுதந்திரத்தின் முக்கிய தலைவராக கருதப்படும் நம் தேசத்தந்தை காந்தியடிகள் காங்கிரஸிலிரந்து விலகியது அன்று அரசியல் நோக்கர்கள் இடம் பொதுமக்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது அவ்வாறு காந்தியடிகள் திடீரென இயக்கத்திலிருந்து வெளியேற காரணமாக இருந்தது என்ன யார் ஏன் அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் நாம் விரிவாக காணவிருக்கிறோம் வாருங்கள்  இந்நிகழ்வை விரிவாக வாசித்து அறிந்து கொள்வோம். 

இரண்டாம் உலகப்போரின்போது இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால் இந்தியா போரில் ஈடுபடுவதைக் காந்தி விரும்பவில்லை. "சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டிய மக்களைப் பலி கொடுத்துவிட்டு சுதந்திரம் அடைவதில் என்ன பயன்?” என்று கேட்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சாரார், "போரில் இந்தியா ஈடுபட வேண்டும்" என்று கருதினார்கள்.



"அகிம்சையில் அழுத்தமான நம்பிக்கை உடையவர் காந்திஜி. அவர் தலைமையின் கீழ் இருந்து கொண்டு பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரில் இறங்குவது சாத்தியம் அல்ல. எனவே, காந்தியின் தலைமையில் இருந்து விடுபட்டாவது பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு உதவவேண்டும்” என்று பல காங்கிரஸ் தலைவர்கள் எண்ணினார்கள். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 1940 ஜூன் மாதத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்தது.

அதில் ராஜாஜி கலந்து கொண்டு பேசுகையில் "மத்தியில் அனைத்துக்கட்சிகளையும் கொண்ட தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதில் காங்கிரஸ் பங்கு கொள்ள வேண்டும்.

யுத்தத்தைப் பொறுத்தவரை அகிம்சையைக் கைவிடத் தயாராக இருக்க வேண்டும்' தினார். என்று

ராஜாஜி கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அவருடைய கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் வெளியாயின. 

ஒருகாலத்தில் “என் மனச்சாட்சியின் காவலர்” என்று காந்தியால் வர்ணிக்கப்பட்டவர் ராஜாஜி, அவரே இவ்வாறு பேசியது 

குறித்து காந்தி வியப்புத் தெரிவித்தார்.

காரியக்கமிட்டி வார்தா நகரில் கூடி ராஜாஜியின் யோசை பற்றி ஆராய்ந்து, முடிவில் ராஜாஜியின் கருத்தை ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டது. "காந்திஜியின் அகிம்சை, போர்க்காலத்திற்கும். பயன்படாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் காந்தியும் கலந்து கொண்டார்.

காந்திக்கு எதிரான தீர்மானம்

1940 ஜூன் 17-ந்தேதி காங்கிரஸ்கா ரியக்கமிட்டி உறுப்பினர்கள் அவள பார்த்து "பாபுஜி! உங்கள் வாதத்தை முழுமனதுடன் எங்களால் ஏற்கமுடியவில் உங்கள் உறவு வேண்டும் என்பதற்காக உங்கள் மீதும் உங்கள் கொள்கை மீதும் நம்பிக்கை இருப்பதாகக் கூறி நம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றி என்ன பயன என்று கூறினார்கள்.

காங்கிரசை விட்டு காந்தி விலகல் காரியக் கமிட்டியினர் 

கூறியதை அமைதி யாகக் கேட்ட காந்தியடிகள். உறுதியான குரலில் கூறினார்.

"உங்கள் கருத்தை என்னால் ஏற்க இயலவில்லை. எனவே, உங்களிடம் இருந்து விலகிக்கொள்கிறேன். என் பரிசோதனைகளைச் செய்து கொண்டு போக எனக்குச் சுதந்திரம் காங்கிரசுக்கும் உங்களுக்கும் தேசத்திற்கும் என்னால் அதிக பலன் கிடைக்க வேண்டும். வேண்டும். ஆகவே என்னை விட்டுவிடுங்கள். என்பதற்காகவே நான் விலகுகிறேன். நான் இவ்வாறு சொல்வதை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கூப்பிடும்போது வருகிறேன். இப்போது நான் இல்லாமல் காங்கிரசை நடத்திக் கொள்ளுங்கள்". இவ்வாறு காந்தி கூறினார்.


நேருவின் நிலை

காங்கிரசில் இருந்து காந்தி விலகியது நேருவுக்கு அதிர்ச்சி அளித்தது. காங்கிரசுக்கும் காந்திஜிக்கும் உள்ள உறவு அறுந்து விட்டது என்று மக்கள் நினைத்து விடக்கூடாது. 20 ஆண்டுகளாக இயங்கி வருகிற காங்கிரஸ் கட்சி அவருடைய சொந்தப இதுபற்றி காந்திஜி "அரிஜன்" பத்திரிகையில் எழுதுகையில் “என்னிடம் நேருவுக்குள்ள அன்பும் நம்பிக்கையும் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கின்றன. ஆயினும் என் முடிவை மாற்றிக் கொள்வதற்கில்லை. இந்தப் பிரிவினால் நன்மையே ஏற்படும் என்று குறிப்பிட்டார். 


"அகிம்சையைப் பரப்புவேன்"

 காரியக்கமிட்டி எடுத்த முடிவு பற்றியும் அகிம்சை பற்றியும் விளக்கி, காந்தி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

 "என் கொள்கைகளை முழு அளவில் ஏற்க இயலவில்லை என்று காங்கிரஸ் காரியக்கமிட்டி கூறிவிட்டது. நான் தனியாக விடப்பட்டாலும் அகிம்சையைக் குறிக்கோளாகக் கொண்டு நடப்பேன். என் வாழ்க்கையின் குறிக்கோளே அகிம்சையைப் பரப்புவதுதான். அரசியலில் நானும் ராஜாஜியும் வெவ்வேறு வழிகளில் பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்டோம். அகிம்சையைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து என் மனம் குழம்பிவிட்டது என்றும் மூளையும் மழுங்கி விட்டது என்றும் அவர் கூறினார். நானும் பாதி விளையாட்டாக “உங்கள் மூளையும் மழுங்கிவிட்டது. பார்வை மங்கிவிட்டது" என்று கூறினேன். ராஜாஜியின் மனமாற்றம் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாலும், அவர் தனது மனச்சாட்சிப்படி நடந்து கொண்டதைப் பாராட்டுகிறேன்.

அகிம்சையில் நம்பிக்கை இல்லாமல், நம்பிக்கை இருப்பது போல நடந்து கொள்வதுதா +ஆபத்தானது. "

இவ்வாறு காந்தி குறிப்பிட்டிருந்தார்.

"சுதந்திரம் வேண்டும்"

இதன்' பின்னர் காங்கிரஸ் காரியக்கமிட்டி ஜூலை 3-ந்தேதி மீண்டும் டெல்லிர "இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதாகப் பிரிட்டன் அறிவிக்க வேண்டும். மத்தியில் கூடியது. இதில் ராஜாஜி முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். அனைத்துக்கட்சிகளையும் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“காங்கிரஸ் தெரிவித்துள்ள சமரசத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கும் பிரிட்டிஷ் அரசு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் தனது திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்" என்று நேரு கூறினார்.


வெள்ளையர் அரசு அளித்த ஏமாற்றம்

காங்கிரஸ் தீர்மானத்தைப் பரிசீலித்த பின் வைஸ்ராய் லார்டு லின்லித்கோ ஆகமம் 8–ந்தேதி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

“ஆகஸ்ட் பிரகடனம்” என்று பெயரிடப் பட்ட அந்த அறிவிப்பில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவது பற்றியோ, தேசிய அரசு அமைப்பது பற்றியோ எதுவும் குறிப்பிடப் படவில்லை.

"சிறுபான்மையினர், சமஸ்தான அதிபர்கள் ஆகியோரின் சம்மதத்தைப் பெறாமல் எதிர்காலத்தில் எந்தவிதமான அரசியல் சீர்திருத்தமும் அமல் நடத்தப்பட மாட்டாது. வைசிராயின் நிர்வாக சபையில் மேலும் சில இந்தியப் பிரமுகர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். யுத்த விஷயங்கள் பற்றி ஆலோசனை கூற யுத்தக் கவுன்சில் ஒன்று அமைக்கப்படும். அதில் இந்தியர்களே இருப்பார்கள்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.


காந்தியிடம் சரணாகதி

வைஸ்ராய் அறிவிப்பு ராஜாஜிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் அளித்தது. "தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையைக்கூட ஏற்க் பிரிட்டன் மறுத்து விட்டதே" என்று மனம் நொந்தார்கள்.

“வைஸ்ராயின் பிரகடனம், பிறக்கும்போதே செத்துவிட்டது” என்றார் பண்டித நேரு.. நிலைமையை ஆராய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செப்டம்பர் 15-ந்தேதி பம்பாயில் (இன்றைய மும்பை) கூடியது. காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டத்தில் காந்தியும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் நேரு முன்மொழிய, சர்தார் படேல் வழிமொழிய கீழ்க்கண்ட

தீர்மானம் நிறைவேறியது: "இந்தியாவுக்குச் சுதந்திரத்தை மறுக்கும் எந்த ஏற்பாட்டிற்கும் காங்கிரஸ் சம்மதிக்காது. இந்தியர்களை மேலும் கேவலப்படுத்தி அடிமைகளாக்கும் எந்த முயற்சிக்கும் காங்கிரஸ் ஆதரவு தராது. 

இந்திய விடுதலைப்போரில் காந்திஜி தலைமையில் அகிம்சை வழியைப் பின்பற்றுவது என்று காங்கிரஸ் தீர்மானிக்கிறது. இனி நடக்க வேண்டியவைகளுக்கு தலைமை தாங்கி நடத்தித் தருமாறு காந்தியடிகளைக் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு தீர்மானம் நிறைவேறியது.

காந்தியடிகள் பழைய நிகழ்ச்சிகளை மறந்து, மீண்டும் சுதந்திரப் போருக்குத் தலைமை ஏற்கச் சம்மதித்தார். 1940 ஜூன் 17-ந்தேதி காந்திஜியின் தலைமையைப் புறக்கணித்த காங்கிரஸ் தலைவர்கள், மூன்று மாதங்கள் முடியும் முன்பே அவரிடம் சரண் அடைந்தனர்.

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...