Wednesday, January 5, 2022

TRB Exam Date Announced

நீண்ட நாட்களாக டிஆர்பி தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - டிஆர்பி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

அன்பார்ந்த planb4teach வாசகர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 கணினி, பயிற்றுனர் நிலை 1 2020-21 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் அதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக  விண்ணப்பிக்குமாறு அறிவித்து அதன் கடைசி தேதியாக 14 .1 .2020 அன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

தற்போது ஆன்லைன் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29 .1 .2022 முதல் 6.2.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளிலும் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேதிகள் பெரும் தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் ௭ன அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு டிஆர்பி வாரியத்தின் பத்திரிக்கை செய்தி கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைச் செய்தி

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்.01/2021, நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண். 01 A / 2021, நாள் 17.09.2021 மற்றும் 01 B /2021, நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது, 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை (Availability of Examination Centre) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது. விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும்.


நாள்: 31.12.2021.

ஆசிரியர் தேர்வு வாரியம்

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...