கிராம உதவியாளர் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 07 (ஏழு) கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள்யாவும் 05.11.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 07 (ஏழு)பணியிடங்களில் இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 05.11.2021 அன்று வரை மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராம உதவியாளர் பதவி தேர்வு செய்யும் நடைமுறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.
தடையின்மைச் சான்று அரசுப் பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற்று
சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
கிராம உதவியாளர் பதவி தேர்வு மையங்கள்
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பின்னர் தனியே நேரில் வழங்கப்படும்.
குறிப்பு : விணணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வர வேண்டும்.
தேர்வு மையங்களை மாற்றக் கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.கிராம உதவியாளர் பதவி பொது
விபரங்கள் :-
கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும்.
வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச்சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கடுவிதி இத்தெரிவிற்குப் பொருந்தும்.
மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40 முதல் 50-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத் தேர்விற்கு தகுதியற்றவர்களாவர்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் :
விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.
05.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள்யாவும் 05.11.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
No comments:
Post a Comment