Thursday, November 4, 2021

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்

கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய ICAR கழகத்தின் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Young Professional பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

ICAR கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் Young Professional பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Sugarcane Breeding Institute கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் பணியில் சில ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்
Sugarcane Breeding Institute ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 08.11.2021 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 08.11.2021 அன்று நடத்தப்படவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...