15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி
நாடு முழுவதுமே ஓமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் திட்டமிட்டபடி இன்று முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது.ந்தியாவில் கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகள் பிரதானமாக செலுத்தப்பட்டாலும் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலும் 15-18 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்த சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள். சுகாதார மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,34,175 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. சென்னையில் 4,601 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,886 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் போதிய இட வசதி ஏற்படுத்தித் தருமாறும் 15-18 சிறுவரக்ளுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, இது தொடர்பாக பெற்றோர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேக்சின் செலுத்தும் போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த வரும் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment