பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் ரொக்கமாக பணமும் அரிசியுடன் கூடிய இதர பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு மக்களுக்கு எந்த வகையான பொங்கல் பரிசினை வழங்க இருக்கிறது என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. கூடுதலாக கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டதால் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெறாது என கூறப்பட்டது. அதன்படியே 20 பொருட்கள் மற்றும் ஒரு முழுகரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பல தரப்பில் இருந்தும் ரொக்கப்பணம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி உறுப்பினர் கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக ஊர் ஊராட்சி உறுப்பினர் தலைமையில் பலரும் பங்கேற்றனர்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் மிகவும் பொருளாதார ரீதியாக சிரமம் அடைந்து வந்தனர் என்றும் அதனால் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் ரொக்கமாக 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அரசு இந்த கோரிக்கையை ஏற்று மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment