பசியும் ருசியும்
மாமிசம் உண்ணுபவர்கள் குறிப்பாக செம்மறி ஆட்டின் மாமிசத்தை அதிகம் விரும்புவதில்லை. வெள்ளாட்டின் மாமிசத்தையே ஆவலுடன் உண்ணுகிறார்கள். இதை ருசிக்காக என்று வைத்துக் கொண்டாலும் வெள்ளாட்டுக் கறியை உண்பவர்களுக்கு அதிக அளவிலான தழைப் புரதமும், சில சமயங்களில் மூலிகைச் சத்தும் கூடக் கிடைக்கின்றன. வெள்ளாடு தரையில் புல் மேய்வதோடு மட்டுமின்றித் தழைகளையும், செடிகளின் தாழ்ந்த இலைகளையும் கூட இரு கால்களைத் தூக்கி நின்று எட்டிப்பறித்து உண்டுவிடுகின்றன. இக்காரணத்தால் அதிகத் தழைகளின் சத்தும், சில சந்தர்ப்பங்களில் அரிய மூலிகைச் சத்தும்கூட வெள்ளாட்டு இறைச்சியில் காணப்பட வாய்ப்பு உண்டு.
செம்மறி ஆட்டின் மாமிசத்திலே கொழுப்புப் பொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை தரையில் வெறும் புற்களை மட்டுமே மேயும் தன்மையுடையவையாதலால் மேற்சொன்ன இதர தழைச் சத்துக்களைப் பெற வழியில்லை. ஆனால் இரும்புச் சத்து குறைவுள்ள நபர் களுக்கு அச்சத்தை பெற எந்த ஆட்டுக்கறியை உண்டாலும் பயனில்லை. ஏன் என்றால் ஆட்டு மாமிசத்தில் இரும்புச்சத்து இருப்பதில்லை என்பது அண்மைக்கால உணவுச் சத்து இயல் கழகத்தின் ஆய்வாகும். இந்த இரும்புச்சத்து, மாடு மற்றும் பன்றிக் கறியில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.
தேனீக்களின் ஆற்றல்
இதயத்துக்கு மிகவும் வலுவூட்டும் இயற்கைச் சத்து தேன்தான். இவற்றினுள் மலைத்தேன் எனப்படும் மலைத் தாவரங்களின் தேனே மிகுந்த சத்துடையது. நாவல் மரப்பூவில் உள்ள தேன் பெருமளவு உடல் நோய்களைக் களையும் சக்தி உடையதாம். மலரின் மையப் பகுதியில் உள்ள தேன் சுரப்பிகள்தான் மிகச் சிறிய அளவில் தேனைச் சுரக்கச் செய்கின்றன. இத்தேனை சிறிது சிறிதாக தேனீக்கள் சேகரித்து தேனடைகளில் வைத்து மெழுகுபோன்ற சுரப்புப் பொருட்களால் இத்தேனடைகளிலிருந்து தேன் ஒழுகாவண்ணம் செய்து விடுகிறது. தேன் சேகரிக்கும் பருவத்தில் ஒரு தேனீக் குடும்பம் குறைந்தது 250 கிலோ கிராம் தேனைச் சேகரித்து விடுகிறது. தேனில் 60% நீர்தான் உள்ளது. சில தேனீக்கள் தேனை வாயில் அடக்கி வெப்பத்தை உண்டாக்கி நீரை தனியே பிரித்து.
துக்கமும் தூக்கமும்
புகைப் பிடித்தல் பழக்கம் மனிதருக்கு விளைவிக்கின்ற கணக்கில்லாத தொல்லைகளைப் புற்றுநோய், இதய நோய், சுவாசப் பை நோய்கள், ஒவ்வாமை, மருந்துகள் பலன் தராமை, ஞாபக சக்திக் குறைவு என்றெல்லாம் பட்டியல் போடலாம். இரசாயனத் தொழிலகங்களில் பணிபுரியும் தொழிலாளர், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் போன்றோரை புகையிலையில் உள்ள 'நிகோடின் பெருமளவில் பாதித்தலை பல சோதனைகள் நிரூபித்துள்ளன. 1965-ஆம் ஆண்டு இருந்த நிலையைவிட புகைப்பிடித்தல் 1975-ஆம் ஆண்டில் மிகவும் ஊறு விளைவிப்பதாக உள்ளது என அமெரிக்க நாட்டு சுகாதாரச் செயலாளர் 'டாக்டர் ஜோசப் கலிபனோ' கூறுகிறார். தற்போது இதற்கும் மேலாக பெனிசில்வேனியா நாட்டு சுகாதார ஆய்வாளர்கள் புகைப் பிடிக்காதவர்களைவிட, புகைப் பிடிப்பவர்களுக்கு தூக்கம் பிடிக்க அதிக நேரம் ஆகும் என்ற உண்மையையும் ஆதாரப்பூர்வமாக பல பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
தின்றதெல்லாம் என்னாச்சு?
நம் உடலில் உணவு ஜீரணித்தல் என்பது ஒரு மிக சிக்கலான இயற்கை இரசாயனப் பரிசோதனை போன்றது. ஒரு சோதனைக் குழாயில் எல்லாவிதமான பரிசோதனை களையும் விஞ்ஞானிகள் நிகழ்த்துகின்ற இந்தக் காலத்தில் கூட மனிதனுக்குள் நடைபெறும் ஜீரண நிகழ்ச்சியை மனித உடலில் உள்ள எல்லாவித ஜீரண அமிலங்களையும் வைத்துக்கொண்டு செயற்கையாக வெற்றிகரமாக சோதனைச் சாலையில் நிகழ்த்த விஞ்ஞானிகளால் இயலாது. இந்த அளவுக்கு சிக்கலான பல நிலைகளைக் கொண்டது செரித்தல் எனும் செயல். இரைப்பையின் சுவருடன் ஒட்டியுள்ள உணவுப் பொருட்கள் எளிதிலும், சுவருடன் தொடர்பின்றி மேல் அடுக்கிலுள்ள உணவு மெதுவாகவும் செரித்தல் அடைகிறது. அமைலேஸ், பெக்டேஸ் போன்ற பல நொதிகள் இந்த நீண்ட செரித்தல் செயலை நிகழ்த்துகின்றன. மாசத்து, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் எளிய பொருட்களாகக் கரைக்கப்பட வேண்டும். உணவுக் கொழுப்பை எளிதாகக் கரைக்க செரிமான மண்டலத்தில் ஒரு தனித்துறையே இயங்கி வருகிறது.
துப்பாதே! துப்பாதே!
பாம்புகளில் 4 மீட்டர் தூரம் வரை துப்பாக்கி குண்டு போல விஷத்தை உமிழும் சில வகைகள் உள்ளன. வயிற்றுத் தசையை உந்திக் கொண்டு வாய்த் தசைக்கு பயிற்சி கொடுத்து இவ்வாறாக பாம்பு விஷத்தை உமிழ்கிறது. 'ஸ்குவிட் என்று அழைக்கப்படும் ஒரு கடல் பிராணிகூட வாய் மூலம் கறுத்த குழம்புப் பொருள் ஒன்றை தனக்கு இரையாக வேண்டிய சிறு பிராணிகளின் மேல் உமிழும். அச்சிறு பிராணிகள் ஒரு மயக்க நிலையையும், எதிர்த்து தாக்க இயலாத தடுமாற்றத்தையும் அடையும் போது அவற்றை 'ஸ்குவிட்டுகள்' தாக்கிக் கொன்று தின்றுவிடுகின்றன. ஆனால் நச்சுமிழும் பாம்புகளின் நஞ்சு மனிதன் அல்லது பிற பிராணிகளின் கண், மூக்கின் சவ்வுப் படலம், தொண்டை இவற்றில் பட்ட உடனேயே தாக்கப்படும். மனிதனோ, பிராணியோ இறந்துவிடும். அளவுக்கு இந்த நஞ்சு கொடியதாகும். நியூகினியா, பிஜி முதலான தீவுகளில் உள்ள காஸ்ட்ரோபாடு சிப்பியுடல் பிராணிகள் 15 செ.மீ. நீளமுடைய கூம்பு போன்ற ஒட்டின் உதவியுடன் விஷப்பல் போன்ற அமைப்புடன் எதிரியைத் தாக்கி அழிக்கிறது.
அமிலம் குடியுங்கள்
அடிக்கடி நமக்கு ஏற்படும் தொல்லைகளான தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் எல்லாம் நம்மிடம் வந்து சேர்ந்துவிட்ட அழையாத விருந்தாளியான ஜலதோஷத் தைக் குறிக்கிறது. இந்த ஜலதோஷத்தால் பாதிக்கப்பட் டிருக்கும் ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும். ஆகவே இந்தத் தொல்லை தரும் ஜலதோஷத்தைத் தடுப்பது எப்படி? இதற்கு மிகச் சரியான மருந்து ஒரு வகை அமிலம்தான். இதன் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 60 மில்லி கிராமும், கருவுற்றுள்ள பெண்களுக்கு 80 மில்லிகிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லிகிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அமிலம் தான் வைட்டமின் 'சி' என்பது.
தயிரோ தயிர்
தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், அது நமது மூளையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. எலும்புகளை உருவாக்கும் கால்ஷியம் தயிரில் ஏராளமாக இருப்பதால் அது சிறந்த சத்துணவாகக் கருதப்படுகிறது. குளிப்பதற்கு முன் தலையில் தயிர் தடவிக் கொண்டு குளித்தால் தலை முடியில் உள்ள பொடுகு போய்விடும் என்று நம்பப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஆதிவாசி இனம் தினமும் அதிக அளவு தயிர் சாப்பிடுவதால் அவர்களுக்கு இருதய நோய் வருவதில்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சூடான உடம்பு உள்ளவர்களுக்குத் தயிர் சாப்பிட்டு வருதல் அவர்களது உடம்பைக் கொள்வதற்கு உதவுகிறது. குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
கரப்பான் பூச்சி மருந்து
பத்திரிகை ஒன்றில் பல நோய்களுக்குக் காரணமான கரப்பான் பூச்சி பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டன. அதே கரப்பான் பூச்சி நோய் தீர்க்கும் அரிய மருந்தாகவும். "பிராங்கியல் ஆஸ்துமா நோயாளிக்கு- குறிப்பாக மூச்சுத் திணறல் இடைவிடாமல் மேல் கீழ் மூச்சு இவற்றால் அவதியுறும்போது, இன்னல்களை உடனே அகற்றும் நண்பனாக தனது உதவியினைச் செய்கிறது.
1886-ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற டாக்டர் சாமுவேல் கிருஸ்டியன் பிரட்ரிக் ஹானிமென் அவர்களால் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட 'சிம்லியா சிமிலிபுஸ் கீயூரென்டர்" அதாவது ஒத்தவைகள் ஒத்தவைகளால் குணமடையும் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு பயன்பட்டுவரும் ஓமியோபதி மருத்துவ முறையில் கரப்பான் பிராங்கியல் ஆஸ்துமாவின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"பிளாட்டா ஓரியன்டாலிஸ்' என்பது கரப்பானிலிருந்து தயாரிக்கப்படும் ஓமியோபதி மருந்து. ஆஸ்துமா சம்பந்த மான உபாதைகள் அதிகரித்து நோயாளி பரிதாபமாக மூச்சுத் திணறலில் சிக்கலுற்று திக்காடும்போது பிளாட்டா ஓரியன்டாலிஸ் தாய் திரவத்தை 15 முதல் 20 சொட்டுகள் நான்கு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து கொடுக்கும்போது ஆங்கில மருத்துவத்தில் ஊசி போட்டுத்தான் தணிக்க முடியும் என்ற நிலையிலுள்ள மூச்சுத் திணறலைக்கூட ஊசி இன்றி ஹோமியோபதியில் கரப்பான் மூலம் எளிதில் தணிக்கலாம்.
'Status Asthmaticus' என்ற நாள்பட்ட மற்றும் கட்டுக்கடங்காத ஆஸ்துமாவைக் கூட மட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. பிளாட்டா.
சோதனைக் குழாய் தேங்காய்
இங்கிலாந்து தாவரவியல் விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் தென்னை மரத்தில் இன விருத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதன் மூலம் ஒரே ஒரு தேங்காய் விதையைக் கொண்டு லட்சக்கணக்கான தேங்காய்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு ஹெக்டேரில் 1.2 டன்கள் இதுவரை உற்பத்தி செய்திருந்தால் அதனை 6 டன்களாக அதிகரிக்க முடியும் என்று நியு சைன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.
தேங்காய்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கேரளா வில் பெரும்பாலான தென்னை மரங்கள் நோய்களால் தாக்கப்படுவதால் உற்பத்திக் குறைந்து ஒரு மரம் சராசரியாக 35 தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், ஆண்டுக்கு 400 தேங்காய்களை உற்பத்தி செய்யும் மரங்களும் உண்டு. இத்தகைய மரங்களின் விதைகளை எடுத்து சோதனைக் குழாய் மூலம் மற்ற மரங்களுக்கும் செலுத்தி அம்மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
ஆம்னி பஸ்
1819-ஆம் ஆண்டில் முதல் பஸ் பாரீஸில் ஓடியது. எட்டு பேர்கள் முதல் பஸ்ஸில் பயணம் செய்தார்கள். பஸ் வந்ததும், பிரஞ்சு நாட்டில் இருந்த பெரிய பணக்கார பிரபுக்களெல்லாம் கோச்சு வண்டியை விட்டு பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள். ஆம்னி பஸ் என்பது பிரான்ஸில் இருந்து வந்த சொல். அதன் பொருள் 'எல்லோருக்கும் எல்லா பொருளும்' என்பது. பஸ் பயணம் தொடங்கிய காலத்தில் பயணிகள் சாப்பிட, குளிக்க, உடை மாற்றிக்கொள்ள வசதியான இடத்தை 'Ommes Ommibus' என்று அழைத்தார்கள்.
நாவல் பழம்
சாலையிலும், சோலையிலும் வளர்ந்து காட்சியளிக்கும் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்பவை, பராமரிப்புத் தேவையில்லை. நாவல் பழத்தின் உண்மை பெயர் 'நாகைப்பழம்' என்பது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரணமாகக் காணப்படும் நாட்டு நாவல். இதன் பழம் சிறியதாக இருக்கும். மற்றது ஜம்பு நாவல். இதன் பழம் பெரியதாக இருக்கும்.
அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்த இப்பழம் நீர்க்கடுப்பு, இரத்தக்கொதிப்பு, நீரிழிவு, நீர் வேட்கை ஆகிய நோய் அனைத்தையும் போக்கக் கூடியது. உடல் சூடு, கண் எரிச்சல் தீர நாவல் பழம் உதவும். சீதபேதி, இரத்த பேதி கண்டவர்கள் நாவல் பழச்சாறு பருகினால் குணம் பெறலாம்.
பழத்தின் உள்ளே இருக்கும் பருப்பை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு ஏற்படும் சமயங்களில் தயிருடன் கலக்கி பருகினால் நலம் அடையலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றினால் இரத்தத்தில் சிதறிக் கிடக்கும் அதிக அளவு சர்க்கரையைக் குறைக்கலாம்.
முற்றாத நாவல் இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் சுவையாக இருக்கும். வாய் நாற்றம் நீங்கும். இதனால் பல் வலி, தேகத்திற்கு குளிர்ச்சியைத் தர வல்ல நாவல் பழத்தை கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.
அகத்திக்கீரை
அகத்தி ஆண்டு முழுவதும் பயிராகும் தாவரம் வெற்றிலைக் கொடிக்குக் கொழுக் கொம்பாக அகத்தியை நடுவதும் உண்டு. தை, மாசி மாதங்களில் அகத்தி நன்றாகப் பூக்கும். அகத்திப் பூவில் சதைப் பற்று அதிகம் உண்டு.
அகத்தியிலையில் வைட்டமின் ஏ, கால்சியம், உப்பு புரோட்டின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளன வெட்டைச் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஓரளவு வாயுத் தன்மை உள்ளபோதிலும் பித்தத்தைத் தணிக்கும். நீர்ச் சளியைப் போக்கும். கண் எரிச்சலுக்குக் கைகண்ட கீரை.
பைத்தியப் போக்குள்ளவர்களுக்கு அரிசி கழுவிய நீரில் அகத்தியிலையை அவித்து உப்பும், சீரகமும் பொடி செய்து கலந்து பருகக் கொடுத்தால் நோய் குணமாகும். இரத்தக் கொதிப்பு நோய்க்கு இது நல்ல மருந்தாகும்.
இதில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் எலும்பு, பல், கண் முதலியவற்றுக்கு அகத்தியிலை ஏற்றது. வயோதிக காலத்தில் எலும்பு வலிமையாக இருக்க அகத்தியிலை பெரிதும் உதவும். மலச்சிக்கலை நீக்குவதற்கும் அகத்தி யிலை மகத்தானது. சதைப்பற்று அதிகமுள்ள அகத்திப் பூவோடு பாசிப் பயிறும் சேர்த்து உண்பதால் இதய நோய் நீங்கும். அகத்திப்பூவும், இளம் இலையும் கலந்து சாறு பிழிந்து பருகிவர குடல் புண் ஆறும்..
No comments:
Post a Comment