Friday, January 21, 2022

தெரிந்து கொள்வோம்

நட்சத்திரங்களுக்கு ஜாதகம் எழுதுவோம்



வானப்படுக்கையில் இரவில் கண் சிமிட்டும் அனைத்தையும் நாம் நட்சத்திரங்கள் என எண்ணி விடுகிறோம். அது தவறு. அவைகளில் நட்சத்திரங்கள்,இரட்டை நட்சத்திரங்கள், கூட்டு நட்சத்திரங்கள், கிரகங்கள், எரி நட்சத்திரங்கள் என்று பல வகைகள் உண்டு. உற்றுப் பார்த்தால் அவற்றில் சற்று மாறுபட்ட நிறங்களின் பிரதிபலிப்பைக் காணலாம். நிறம் மற்றும் வெளிப் படுத்தும் வெப்பநிலை இவைகளை அடிப்படை பண்புகளாக வைத்துக்கொண்டு O, B, A, F, G, H, K, M, R, N என்று 10 வகையாக அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் பிரிக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக அதிக வெப்பத்தை வெளியிடும் சூரியன் 'G' என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. நீலநிறம் உடையவை 'O' வகையிலும், ஆரஞ்சு வண்ணம் 'K' வகையிலும், சிவப்பு 'R' வகையிலும் இதேபோலப் பிரிக்கப்பட்டுள்ளன.

மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டால் ஜோசியர்கள் அதனை கிரகதோஷம் என்று சொல்வார்கள். நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போதோ நமக்கு தோஷம் ஏற்படுத்தும் கிரகங்களின் 'ஜாதகங்களையே' நாம் கணிக்க ஆரம்பித்துவிட்டது வேடிக்கையானது. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணங் களும், வேகமும் கணக்கிட முடியாதவையாகி விட்டன.


இரசாயனப் பஞ்ச பூதம்



உலக இயக்கத்தின் அடிப்படை விஞ்ஞான தத்துவம் இரசாயனம்தான். சுருங்கச் சொன்னால் எல்லாவித உயிர் வகைகளின் செயல்களாகச் சொல்லப்படுபவை அனைத் தும் இரசாயனச் செயல்கள்தாம்.

இந்த அடிப்படை இரசாயனம் ஆகிய வேதியல் பண்டைய நாட்களில் எவ்வாறு தோன்றியது என்று பார்க்கும்போது, 'எம் போடாகிள்ஸ்' என்ற ஆதிநாள் அறிஞர் கண்ணில் படுகிறார். அவர் உலகின் பொருட்கள்.

அனைத்தும் அடிப்படையாக நான்கு மூலக் கூறுகளை உடையது என்றும், அவை முறையே நெருப்பு, காற்று, நீர், மண் என்பனவே என்றும் உறுதியாகக் கூறினார்.

இவருக்குப் பின்னர் வாழ்ந்த 'எபிக்யூரஸ்' இந்த நான்கு பொருட்களும் சிறிய அடிப்படைகளால் ஆனவை என்று சொல்லிச் சென்றார். ஆனால், நம் நாட்டு ஆதிக்குடி மக்கள் மேற்சொன்ன கிரேக்க அறிஞர்களுக்கும் பல ஆண்டுகள் முன்னரே உலகின் இயக்கத்துக்கு ஆதாரமான ஐந்து பொருட்களாக க்ஷிதி (மண்), அபஸ் (நீர்), தேஜ் (நெருப்பு), மருத் (காற்று), யோமா (வானம்) என்று பிரித்துவிட்டுப் போன தீர்க்க தரிசனம் மிகவும் வியப்புக்குரியது ஆகும்.

எங்கும் நிறைந்த பரம் பொருள்



'பொதிலட்' என்ற இரசாயன விஞ்ஞானி இரசாயனம்தான் உலகிலேயே தலைசிறந்த அறிவியலின் ஆக்கப்பூர்வமான வினோத விசித்திரங்கள் நிறைந்த பாடம் என்கிறார். இரசாயனத்தின் அற்புதங்களை விளக்க அவர் மேலும் கூறுவார் - காற்று, நீர், மண், கரி, உப்பு போன்ற நம்மைச் சுற்றியுள்ள, நமக்கு மிகவும் பழக்கப்பட்ட பொருட்களின் நுண் அமைப்பு, அவை ஆக்கப்பட்டுள்ள விதம் என்பது போன்ற உண்மைகள் நம்மைப் பேராச்சரியப்படுத்துகின்றன. ஒரு இரசாயனப் போதகரைப் பொறுத்தவரை நிலக்கரியும், வைரமும் ஒரே தன்மையுடையதே. ஆனால், சாதாரண மனிதர்களுக்கு அவை இரண்டும் ஒன்றாகத் தெரியுமா அல்லது ஒன்று என்பதை ஒத்துக்கொள்ளத்தான் செய்வார்களா? மண்ணெண்ணெய் எல்லோர் கண்களுக்கும் வெறும் நிறமற்ற, எரியக்கூடிய மண்ணெண்ணெய்தாள். இரசாயனிக்குத்தான் அது தெரியும் கரியும், நீரும் கலந்த ஒரு திரவம் என்று. சுண்ணாம்பும், பளிங்கும், பவழமும் ஒரே தன்மையாலான அடிப்படைப் பொருட்களைக் கொண்ட கால்சியக் கூறு என்பதை இரசாயனிதான் மக்களுக்குச் சொல்ல முடியும். மலேரியாவை ஓடஓட விரட்டும் 'குவினைன்' மருந்தைத்தான் அனைவரும் அறிவர். ஆனால், அது கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கரி, நீர், பிராண வாயு இவற்றின் சேர்க்கைப் பொருள் என யாரால் உணர முடியும்.

ஒரு நெருப்புக் குச்சி உராய்ந்து எரியும்போதும், ஒரு விறகுக் கட்டை பற்றவைக்கப் படும்போதும், ஒரு புகைப்படத் தட்டு ஒளியில் காட்டப்படும் போதும், அமிலம் நிறைந்த நீரில் சிறிது மின்சாரம் பாய்ச்சப் படும்போதும் என்னவெல்லாம் பல இரசாயன அற்புதங்கள் நிகழுகின்றன தெரியுமா? கேளுங்கள் இரசாயனத்தை.

மனித உடலுக்குத் தீமை விளைவிக்குக் சோடிகள் கூறுகளும், நச்சுத் தன்மையுடைய குளோரின் வாயுவும் இணைந்து நமது தினச் சமையலுக்கு அடிப்படை முலை கூட்டும் உப்பாக பரிணமிக்கிறது. நாம் உண்ணும் உணவில் நூற்றில் இருபது பங்கு இந்த உப்பேயாகும். நம் உடம் கூற்றின் 20% இந்த உப்பேதான். சாராயத்திலிருந்து சர்க்கரையும், மின்சார வெப்பக் கதிர்களிலிருந்து செயற்கை வைரமும் தருவது இரசாயனிமே.

இரசாயனம் ஆக்கபூர்வமானது, அழியாத இவற்கை செயலை நாம் தடுத்து நிறுத்த இயலாது. நமக்கு வேண்டிய அனைத்தையும் இயற்கை காரவர்கள் தருவதற்கு இயலாது. நாம் விரும்பி காத்திருக்கும் கால்பந்தாட்டம் நடைபெற இருக்கும் மாலைப்பொழுதில் திடீரென அதைக் கெடுக்க வரும் மழையை நீங்களோ, நானோ தடுக்க இயலுமா? வெள்ளி க்கரத்தின் இடத்தில் சனிக் கிரகத்தை மாற்றி வைத்து அதிக ஒளியூட்ட வான சாஸ்திரத்தில் வசதி கிடையாது.

ஆனால், இதைப்போன்ற அற்புதங்கள் இரசாயனத்தில் மட்டும் அதிகம் நிகழ வைக்க முடிகிறது. புரோமின் அணுக்கூற்றின் இடத்தில் குளோரின் அணுக்கூற்றைப் பொருத்த முடியும். கறுத்த, அருவருக்கத்தக்க, தீய நாற்றமுடைய கரிப்பாகில் இருந்து சர்க்கரையைவிட 100 மடங்கு இனிமை தரும் இரசாயனப் பொருட்களையும், மல்லிகையைவிட அதிக நறுமணம் தரும் பொருட்களைத் தயாரிக்கும் அற்புதம் இரசாயனத்தில்தான் காண முடியும் என்று பலவாறு கூறி முடிக்கிறார் பெர்திலட்.

இந்த உண்மைகள் தாம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆகவே இரசாயனம் என்பதன் தூய தமிழாக்கம் 'வேதியல்' என்பதல்ல. 'வியப்பியல்' என்றுதான் கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்தது இந்த வியப்பியல்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. உயிரியல் விஞ்ஞானம் புது உயிர்களை மட்டுமே உருவாக்க மூடியுமே அன்றி பிறந்த உயிருக்கு வலுவான பண்புகளை போதிக்க முடியாது. ஒரே பெற்றோருக்குப் பிறந்த குழந்தை களுக்குள்ளேயே பல்வேறு மாறுபட்ட பண்புகளையும், குணநலன்களையும் நாம் காண்கிறோம். அத்லும் குறிப்பாகத் தாயின் ஒரே சினை இரண்டாகப் பிளவுபட்டு வளர்ந்து வரும் இரட்டைக் குழந்தைகள் தோற்றத்தில் ஒரே அச்சாக ஒத்து இருந்தாலும் பண்புகளும், பழக்க வழக்கங் களும் மாறுபடக் காரணம்தான் என்ன? சூழ்நிலைதான்.

'சாண்டாக்' என்றும் 'நெல்சன்' என்றும் இரண்டு உளவியல் அறிஞர்கள் 1933-ஆம் ஆண்டு ஒரே தோற்றத்துடன் ஒரே பிரசவத்தில் பிறந்த ஹென்ரி, ஜான், பிரட் என்ற மூவரையும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்த்து வந்த பின் முதல்வன் மிகுந்த சுயநலமியாகவும், இரண்டாமவன் பெற்றோரைப் பேணுபவனாகவும், மூன்றாமவன் சமூகநல மனப்பான்மையுடைய தொண்டனாகவும் உருவானான். சூழ்நிலையின் பங்கு ஒருவனது மன வளர்ச்சியில் மிக முக்கியமானது என்ற கருத்தை ஒரு உளவியல் உண்மையாக ஆக்கினார்கள் இப்பரிசோதனையாளர்கள் இருவரும்.

டோக்கியோவில் பிறந்த ஜப்பானியக் குழந்தை ஒன்றை 6-ஆவது மாதத்திலேயே தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோவில் ஓதுவார் ஒருவர் வீட்டில் வளர்த்துப் பார்த்தால் அந்தப் பையன் தனது ஐந்தாவது வயதில் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பாடலைப் பாடாமல் 'கராத்தே' குத்துக்களை ஜப்பானிய முறையில் சரமாரியாக விடுவான் என்று எதிர்பார்ப்பது தவறல்லவா? எல்லாமே சேருமிடத்தைப் பொறுத்தாகிறது.

செடி அரக்கர்கள்



உலகத்திலுள்ள மக்கட்தொகையில் மாமிச உணவு உண்பவர்களைப் போலவே மரக்கறி உணவு உட்கொள்ளு பவர்களும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் என்பது தெரிந்ததே. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான காய்கனி வகைகளைத் தாவரங்களிலிருந்துதான் பெறுகிறார்கள். கீரை போன்ற சில செடி வகைகளின் இலைகள்கூட மனிதனுக்கு உணவாகின்றன. பெரும்பாலும் இலை, தழைகள் நாற்கால் விலங்குகளின் விருப்ப உணவாக இடம் வகிக்கின்றன. இப்படித் தாவரங்கள் நமக்கு உணவாகப் பயன்படு வதைத்தான் பொதுவாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், புழு, பூச்சி இனங்களையே உண்ணும் தாவரங்களைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டோ? இத்தகைய 'மாமிச பட்சிணி தாவரங்கள் மிகவும் விசித்திரமானவையாகும். 'டிரசீரா'. 'டயானியா' என்றெல்லாம் விஞ்ஞானப் பெயர்களால் அழைக்கப்படும் சில தாவரங்கள் தங்களது உடலில் மிகச் சிறிய மெல்லிய ரோமம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. இவற்றிலிருந்து சுரக்கும் நச்சுப் பொருட்களைக் கொண்டு இத்தாவரங்கள், தங்கள் மீது அமரும் புழு, பூச்சிகளை மயக்கமுறச் செய்கின்றன. இவ்வாறு மயக்கமுற்ற புழு, பூச்சி முதலியவற்றை அகப்பை போன்ற தன்

இலைகளால் மூடிச் சுருட்டி இறக்கச் செய்து, அதனை சிறிது சிறிதாக உறிஞ்சி உண்டு விடுகிறது. இந்திய நாட்டின் சில வறண்ட காடுகளிலும், சில சதுப்பு நிலப் பகுதிகளிலும் இத்தகைய செடியினங்கள் வளருகின்றன. இந்த அரக்கத்தன்மையுடைய தாவரங்கள் எவ்வளவு பெரிது ருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? வெறும் 3 முதல் 5 அங்குல உயரமுள்ள மிகச் சிறிய செடிதான்.


சூரிய நமஸ்காரம்



இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் ""கிருமி நாசினி” எது தெரியுமா? சூரிய ஒளிக் கதிர்களே! ஆம். அதில் ''அல்ட்ரா வயலட்" எனப்படும் புற ஊதாக் கதிர்கள் உள்ளன. இவை இயல்பாகவே மனிதன், கால்நடைகள், தாவரங்கள் இவற்றின் மேல் படிந்து தாக்கும் மிகச் சிறிய நோய்க் கிருமிகளை அழித்து விடுகின்றன. நாம் அறியாமலேயே இயற்கை நமக்குச் செய்யும் மிகச் சிறப்பான பாதுகாப்பு இது. இந்தக் காரணத்திற்காகவேனும் நாம் சூரியனை வணங்கலாம் அல்லவா!

கண்களில் எத்தனை ஆயிரம்



கடவுளின் படைப்பில் நமக்கெல்லாம் இரண்டே கண்கள்தாம். இந்த இரு விழிகளாலேயே உலகிலுள்ள இயற்கை எழிலை எல்லாம் அளக்க முடியாமல், அன்ளிப்பருக இயலாமல் சலிப்படைகிறோம் நாம். இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருந்தால் ஒரு மனிதனின் நிலை எவ்வாறு இருக்கும்? ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கள் ஒரு ஜீவராசிக்கு இருக்குமா? இருக்கிறதே! வீடுகளில் சாதாரணமாகத் தென்படும் அற்பக் கரப்பான் பூச்சிதாள் அது. ஒவ்வொரு கரப்புக்கும் சுமார் 20-க்கும் மேற்பட்ட "ஒம்மட்டீரியம்" எனப்படுகின்ற சிறு கண்கள் உள்ளன. அதற்குப் பார்வை எப்படி எப்படி எல்லாம். புலப்படும் என்பது படைத்த பரமனுக்கே வெளிச்சம்.

மலர் நீளம் சொன்ன புலவர்



'வல்லிஸ் நேரியா' எனப்படுவது தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு நீர் வாழும் கொடி. இது சமீப காலங்களில் சுமார் 150 ஆண்டுகளில் உலகிலுள்ள எல்லாவித நீர்நிலைக் குட்டைகளிலும் பரவிவிட்டது. இதன் பரவுதலைக் கட்டுப்படுத்த 'விஸ்கான்சின்'. பெனிசில்வேனியா' போன்ற அமெரிக்கப் பல்கலைக் கழக சூழ்நிலையியல் அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இக்கொடி ஆழமான நீர்நிலைகள் முதல் மிகச்சிறிய குட்டைவரை மிக வேகமாகப் பரவ வல்லது. கொடியின் மலர்கள் சார்ந்து வாழும் நீர்நிலையின் நீர்மட்டத்தில் வெளியே தெரியும்படி நீண்ட காம்புடன் விளங்கும். இதில் வியக்கத்தக்க ஆச்சரியம் யாதெனில் அது வாழுகின்ற நீர் குட்டைகளின் ஆழத்துக்கு ஏற்ப இக்கொடியின் நீண்ட மலர்க்காம்பு அல்லது நடுத் தண்டுப் பகுதி நீட்சி அடைகிறது அல்லது குறைகிறது.

ஆகவே இத்தாவரத்துக்கென ஒரு குறிப்பிட்ட நீளம் என்பது இல்லை. நீண்ட கால ஆய்வுகளைச் செய்துவிட்டு ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு 'நீர்வாழ் சூழ்நிலையடிப் படையில் ஆன தக.அமைவு' என்று முடித்துவிட்டனர். இதனை நம் வள்ளுவர் அன்றே தம் குறளில்,

"வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனையது உயர்வு என்று அறிவியல் தமிழால் சொல்லிச் சென்றுவிட்டாரே.

மனிதனுக்கு இடமில்லை



மிகவும் மெல்ல இனப் பெருக்கம் செய்யும் யானை ஏறக்குறைய 30 வயதை அடையும் சமயம் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பருவத்தைப் பெறுகிறது. அதன் சூல் பருவம் சுமார் 22 மாதங்கள். இது ஒரு முறை ஒரே ஒரு குட்டியைத்தான் ஈனுகிறது. நாயையும், பூனையையும் போல நான்கைந்து குட்டிகளை இடுவதில்லை. யானையின் இனப்பெருக்கப் பருவம் 30 வயது முதல் 90 வயது வரை நீடிக்கிறது. ஆனாலும் இப்பருவத்தில் அதிகபட்சம் ஒரு யானை 6 குட்டிகளைத்தான் பெற முடிகிறது. எல்லாக் குட்டிகளும் உயிருடன் இருந்து இனத்தைப் பெருக்கினால் ஒரு ஜோடி யானைகளின் பின்சந்ததிகள் 750 ஆண்டுகளில் 19 லட்சம் யானைகளாகப் பெருகிவிடுமாம்.

இனப்பெருக்கம் மிகக் குறைந்த யானை இனத்திலேயே இந்த நிலை என்றால் யானைகளைவிட 8 மடங்கு அதிக இனப்பெருக்க வேகமுடைய மனிதனது இனத்தில் வாழ்க்கைப் போராட்டமும், சாவு போன்ற இயற்கை நியதிகளும் இல்லாவிட்டால் இன்னும் சரியாக 18 ஆண்டுகளில் மனிதன் நிற்க மட்டும்தான் இப்பரந்த புவியில் இடம் இருக்கு மாம். அப்புறம் அல்லது இப்புறம் சிறிது திரும்பக் கூட இயலா தாம். ஏனெனில் எல்லா இடத்திலும் நெருக்க மாக வேறு மனிதர்கள் நின்றிருக்க இருக்குமாம். 


No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...