வெற்றிடத்தின் பலம்
அடிப்படையான பௌதீக உண்மைகளில் ஒன்று இது. வெற்றிடத்தில் பற்றும் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்று இந்த விதி கூறுகிறது. இதனை ஐரோப்பாவில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'டஸ்ஸலானி' என்ற பௌதீக அறிஞர் ஒரு விசித்திரமான முறை மூலம் பரிசோதித்தார். ஒன்றோடு ஒன்று பொருந்தக் கூடிய இரு அரைக் கோளங்களை எடுத்து வந்து அவற்றினை இணைத்தார். பின்னர் அக்கோளத்தின் உட்பகுதியிலுள்ள காற்று முழுமையையும் உறிஞ்சிக்கொண்டு கோளத்தின் உட்பகுதியை காற்றில்லாத முழு வெற்றிடம் ஆக்கினார். இதற்குப் பின் இரு அரைக் கோளங்களையும் பிரிக்க அவரால் இயலாது போயிற்று. இவற்றினைப் பிரிக்க அக்கோளத்தின் இருபக்க அரைக்கோணங்களையும் இணைத்து பக்கத்துக்கு நான்கு குதிரைகளாக மொத்தம் 8 குதிரைகளின் திறனை உபயோகித்து எதிர் பக்கங்களில் இழுத்தும் பிரிக்க முடியாதபடி போய்விட்டன எதிர் என்றால் வெற்றிடத்தில் பற்றுத்திறன் அதிகரிக்கும் வலிமையைத் தெரிந்துகொள்ளலாம்.
சுவர் பல்லியால் தலை கீழாகக் கூட அதிக விரைவில் நகர முடிகிறது என்றால் அதற்குரிய காரணமும் மேற்சொன்ன அடிப்படையில் ஆனதே ஆகும். பல்லி தன் கரங்களை தரையில் அழுத்தி விரல் வழியே காற்றை வெளிபோகச் செய்த பின் விரல்களை இணைத்து கரங்களை ஒரு கெட்டியான கிண்ணம் போல் உருவாக்கி உள்ளே காற்று இல்லாத வெற்றிடத்தை உண்டாக்கி விடுகின்றது. இந்த வெற்றிடத்தின் அதிகப்படியான பற்றுத் திறன்தான் பல்லியைக் கீழே விழாத வண்ணம் சுவரில் நகரச் செய்கிறது. பௌதீகம் காட்டும் பிராணி இயல் பாருங்கள்.
தற்கொலைக் கற்கள்
கோழியின் சிறு சிறு கற்கள் நிறைய இருப்பதனை கோழியை உணவுக்காக அறுப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஏன் கோழியின் வயிற்றில் மட்டும் இதுபோன்ற கற்கள் உள்ளன என்றால் கோழியேதான் தனது தீனியை உண்ணும்போது மிகச் சிறிய கற்களையும் உடன் சேர்த்து விழுங்கி வைக்கின்றது. உண்ணப்பட்ட தீனி இரைப்பையில் நன்கு அரைபட்டு ஜீரணமாவதற்கு சற்று அதிகமான உராய்வு கிடைக்க வேண்டும் என்றே கோழியே இக்கற்களை விழுங்கும் அதிசயம் தெரிய வருகிறது. புறா போன்ற சிறு பறவைகளும் மிகவும் வயதடைந்து பறக்க இயலாத நிலையை அடையும் போது விசித்திரமான முறை யில் தற்கொலை செய்து கொள்வதுண்டு எனப் பறவை இயலார் தெரிவிக்கின்றனர்.
உயர்ந்த மரக் கிளைகளில் இப்புறாக்கள் நிறைந்த அளவில் சிறு கற்களை சேமித்து வைத்துக்கொண்டு பின் ஒவ்வொன்றாக விழுங்கிவிட்டு அந்த உயரத்திலிருந்து மேலும் பறக்க முயலாமல் கீழே குதித்து விடுமாம். பளு அதிகமாகிவிட்ட பறவைகள் கீழுள்ள பாறை, கற்கள் இவற்றின் மேல் அதிக உயரத்திலிருந்து விழுவதால் மோதி இறந்துவிடுவது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான். ஆனாலும் இங்கே பறவைகளின் அடிப்படை பௌதீக அறிவினை நாம் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பார்வையிலே சேவகனாய்
மனித உடலிலேயே மிகவும் நன்றியுள்ள சேவகன் சிறுநீரகம்தான் என்றால் அது மிகையாகாது. இதயம் போன்ற மற்ற உறுப்புகளைப் போல் அல்லாமல் மிகவும் இறுதியில் தன்னால் இயலாது என்ற நிலை வரும்போது மட்டுமே இவ்வுறுப்புகள் இயங்க மறுக்கும். இதனுள் சிறுநீரைப் பிரித்தெடுக்கும் மிக நுண்ணிய பல லட்சம் குழாய்கள் இணைந்து காணப்படுகின்றன. இக்குழாய் முழுவதையும் இணைத்து நீட்டினால் ஒரு முனை சென்னையிலும், மறுமுனை செங்கற்பட்டிலும் இருக்கும். ஆமாம் 35 மைல்கள் நீளம்வரை இக் குழாய்கள் நீளும்.
நின்றால் சாவா? கொன்றால் சாவா?
தரைமட்டமாக நடந்து செல்லும் நாற்கால் பிராணிகள் அல்லது ஊர்ந்து செல்லும் பிராணிகளை இயற்கைக்கு மாறான முறையில் தரையிலிருந்து செங்குத்தாக செல்வது மேல்நோக்கி நிற்க வைத்துப் பார்த்தால் சிறிது நேரத்தில் அப்பிராணிகளின் மூளைக்கு இரத்தம் தடைபட்டுவிடும். முயலையும். பாம்பையும் தரை யிலிருந்து மேல்நோக்கி மேல்மட்டமாக 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்க வைத்தால் 'மூளை இரத்த சோகை' என்ற நோய் ஏற்பட்டு அவை மயக்கமுற்றுவிடும். மனித மூளையின் 3, 1/3 பவுண்டு எடையில் இரத்த ஓட்டக் குறைவு ஏற்பட்டால் 1, 1/3 பவுண்டு எடை குறைந்துவிடும். மிருகங்களின் மூளைக்கு இதைப் போல இரு மடங்கு விகிதத்தில் கணக்கிட வேண்டும். சில மிருகங்களை நம் பசிக்காக கொன்றால் சாவு, சிலவற்றுக்கு நின்றாலும் சாவா?
லப்-டப்
இரத்த ஓட்டத்தை சீராக்குவது இதயத்தின் பணி. 'லப் டப் என்று தொடர்ந்து ஓசையிட்டு இதயம் வேலை செய்வதன் பதிவே இதயத் துடிப்பாகும். பிராணிகளின் உடலளவுக்கு ஏற்ப துடிப்பு இருக்கு
திமிங்கலத்தின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 7 முறை. அதைவிடச் சிறிய யானைக்கு நிமிடத்துக்கு 47 துடிப்புகள்.
பூனைக்கு - 240 துடிப்புகள்.
அணிலுக்கு 410 துடிப்புகள். சரிதானே!
தேனீக்களின் ஆற்றல்
இதயத்துக்கு மிகவும் வலுவூட்டும் இயற்கைச் சத்து தேன்தான். இவற்றினுள் மலைத்தேன் எனப்படும் மலைத் தாவரங்களின் தேனே மிகுந்த சத்துடையது. நாவல் மரப்பூவில் உள்ள தேன் பெருமளவு உடல் நோய்களைக் களையும் சக்தி உடையதாம். மலரின் மையப் பகுதியில் உள்ள தேன் சுரப்பிகள்தான் மிகச் சிறிய அளவில் தேனைச் சுரக்கச் செய்கின்றன. இத்தேனை சிறிது சிறிதாக தேனீக்கள் சேகரித்து தேனடைகளில் வைத்து மெழுகுபோன்ற சுரப்புப் பொருட்களால் இத்தேனடைகளிலிருந்து தேன் ஒழுகாவண்ணம் செய்து விடுகிறது. தேன் சேகரிக்கும் பருவத்தில் ஒரு தேனீக் குடும்பம் குறைந்தது 250 கிலோ கிராம் தேனைச் சேகரித்து விடுகிறது. தேனில் 60% நீர்தான் உள்ளது. சில தேனீக்கள் தேனை வாயில் அடக்கி வெப்பத்தை உண்டாக்கி நீரை தனியே பிரித்து வெளியேற்றி விடுவதும் உண்டு.
செம்போ செம்பு
'செம்பு' ஒரு அதி அற்புதமான உலோகம். கற்கால மனிதர்களால்கூட செம்பின் பயன் அறியப்பட்டிருந்ததாகப் பல செய்திகள் உள்ளன. இதன் அணு எடை 63.5 என்பதோடு அணு எண் 20 ஆகும். முதன் முதலில் அமெரிக்க நாட்டில் சுபீரியர் ஏரியின் அருகிலும், பின்னர் சைபீரியாவின் யூரல் மலைத் தொடர் அருகிலும் அதற்குப் பின் இந்தியாவின் அசாம் பகுதியிலும் செம்பு கலப்பற்ற தனிப் பொருளாகக் கிடைத்ததாம். பல இரசாயன குணங்களை உடைய செம்பு சிறப்பான மருத்துவ குணங்களையும் உடையது.
உதாரணமாக இரத்தச் சிவப்பணுக்கள் செம்புச் சத்தினால் வளருகிறது. செம்புச் சத்துக் குறைவு ஒருவனை இரும்புச் சத்துக் குறைவைப் போலவே இரத்தச் சோகை நோயில் கொண்டுவிடும். தொழுநோய் மற்றும் பல தோல் வியாதிகள் செம்புச் சத்தினால் குறைவதாக மருத்துவ ரீதியில் ஆய்வுகள் பல கூறுகின்றன. இச் செம்புச் சத்தை நாம் மிக எளிதாகப் பெற கீழ்க்காணும் தாவரங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவையாவன : 1) பாக்கு, 2) செங்கீரை, 3) கோவைக்காய், 4) ஓரிதழ் தாமரை, 5 ) வாழை, 6) செந்தாமரை, 7) தும்பை, 8) சிறுகீரை முதலியன. இவற்றில் ஒன்றிரண்டை பணச் செலவில்லா மல் கூடப் பெறலாமே.
அர்த்தங்கள் ஆயிரம்
விஞ்ஞான முறைப்படி ஒவ்வொரு நுண் உயிரி முதல் விலங்குகள், மனிதர்கள் லத்தீன் மொழி வரை அடிப்படையில் பெயர்கள் உண்டு. உங்களுக்கு 'தக்காளிச் சட்னி' மிகவும் பிடிக்குமா? அந்தத் தக்காளியின் விஞ்ஞானப் பெயர் 'லைகோ பெர்ஸிகம் எஸ்குவன்டம் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வழியில்லை.
உருளைக் கிழங்கு பிரியர்கள் அனைவரும் தமது விருப்ப உணவு விஞ்ஞான முறையில் 'செலானம் டியூபரோசம்" என்றே அழைக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டுதான் சாப்பிடுகிறார்களா என்ன? அவ்வாறே விஞ்ஞானப் பெயர்களைத் தெரிந்திருக்கும் ஒருவர் கடையில் தேங்காய் கேட்பதற்குப் பதிலாக 'காக்கஸ் நூசிபரா' இரண்டு கொடு என்று கேட்டால் கடைக்காரர் என்ன செய்வார். எல்லாவித ஹோமோ சாபியன்களுக்கும் எல்லாவித பெயர்களும் விஞ்ஞான ரீதியாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்ன திகைக்கிறீர்களா? ஹோமோ சாமியன் என்பது மனிதனின் விஞ்ஞானப் பெயராகும்.
இப்பெயர்கள் அர்த்தம் அற்றவை என்று எண்ணிவிட வேண்டாம். 'தெஸ்பீசியா கார்டிபோலியா' என்று பூவரச மரத்துக்குப் பெயர் உண்டு. 'கார்டியம்' என்பது இதயத்தை குறிக்கும் சொல். போலியம் என்றால் இலை என்று பொருள். பூவரச மரத்தின் இலையைப் பாருங்கள். இதய வடிவமாக இருக்கிறதல்லவா. அவ்வாறே பல அர்த்தங்களுடனே பிராணிகளும், நுண்உயிர்களும்கூட விஞ்ஞானப் பெயர்கள் பெற்று விளங்குகின்ற ன்றன. இப்பெரிய முறையை கண்காணிக்க அகில உலகத்து அளவில் ஒரு கழகம் செயல்படுகிறது. இக்கழகத்தின் அனுமதியோடு முதன் முதலாக 'நஞ்சு' எனப் பொருள்படும் படியான 'வைரஸ்' என்ற பெயர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வகை மிக நுண்ணிய அமைப்புகளுக்கு இடப்பட்டது.
இந்த வைரஸ்கள் மனித இனத்துடன் கால்நடைகள், பயிர்கள் இவற்றுடன் கலந்து அன்றும், இன்றும், என்றுமே வாழ வல்லவையாகும். இவை கண நேர எண்ணிக்கையில் பல ஆயிரம் மடங்கு பெருகிவிடுகிறது. மண், பயிர், விதை, பூச்சிகள், காற்று, நீர் இவற்றால் வேகமாகப் பரவி கண்டம் விட்டு கண்டம் தாவி நோய்களைப் பரப்புவன இந்த வைரஸ்களே. தாரண ஜலதோஷம் முதல், 18-ஆம் நூற்றாண்டில் நம் நாட்டில் 60 லட்சம் பேர் இறக்கக் காரணமாயிருந்த அம்மை நோய்வரை ஏற்படுத்துவது வைரஸ் வகைகளாகும். ஓராண்டுக் காலத்தில் உலகம் முழுவதும் 2.6 கோடி ரூபாய் பெறுமானம் உடைய உணவுப் பயிர்களையும், தாவரங்களையும், இறைச்சிக்கான கால்நடை, பறவைகளையும் அழித்து வரும் இந்த வைரசு களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் இன்று விஞ்ஞானிகள் திணறுகின்றனர். இந்த அளவு பிரதாபங் களைப் பெற்ற மகா கியாதி உடைய வைரசுகளைப் பற்றிய மிக அடிப்படையான, ஆச்சரியமான இன்னும் முடிவுக்கு வரமுடியாத விவரம் என்னவென்று தெரியுமா? அது வைரசுகளுக்கு உயிர் உண்டா, இல்லையா என்பதுதான். இப்பிரச்சினைக்கு இன்னும் அறிவியல் பூர்வமான விளக்கத்தை விஞ்ஞானிகளால் தருவதற்கு இயலவில்லை. விஞ்ஞான சொற்கள் அர்த்தங்கள் பல கொண்டவை.
துக்கமும் தூக்கமும்
புகைப் பிடித்தல் பழக்கம் மனிதருக்கு விளைவிக்கின்ற கணக்கில்லாத தொல்லைகளைப் புற்றுநோய், இதய நோய், சுவாசப் பை நோய்கள், ஒவ்வாமை, மருந்துகள் பலன் தராமை, ஞாபக சக்திக் குறைவு என்றெல்லாம் பட்டியல் போடலாம். இரசாயனத் தொழிலகங்களில் பணிபுரியும் தொழிலாளர், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் போன்றோரை புகையிலையில் உள்ள 'நிகோடின்' பெருமளவில் பாதித்தலை பல சோதனைகள் நிரூபித்துள்ளன. 1965-ஆம் ஆண்டு இருந்த நிலையைவிட புகைப்பிடித்தல் 1975-ஆம் ஆண்டில் மிகவும் ஊறு விளைவிப்பதாக உள்ளது என அமெரிக்க நாட்டு சுகாதாரச் செயலாளர் 'டாக்டர் ஜோசப் கலிபனோ' கூறுகிறார். தற்போது இதற்கும் மேலாக பெனிசில்வேனியா நாட்டு சுகாதார ஆய்வாளர்கள் புகைப் பிடிக்காதவர்களைவிட, புகைப் பிடிப்பவர்களுக்கு தூக்கம் பிடிக்க அதிக நேரம் ஆகும் என்ற உண்மையையும் ஆதாரப்பூர்வமாக பல பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment