பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.
பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.
தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.
- தமிழகத்தை விட்டு நகர்ந்தது ஒக்கி புயல், வருகிறது புதிய காற்றழுத்தம்
- இலங்கை: அரிய வகை தந்தம் கொண்ட 'தல பூட்டுவா' யானையைக் கொன்றதாக 5 பேர் கைது.
- இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. அப்படி பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒன்றாகும். ஆனால், bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.
சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் சுவாரசியமானது.
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.தி
உயர்வுக்கு காரணமென்ன?
No comments:
Post a Comment